“இல்ல. எனக்குப் புரியல” பீஸ்ட் விஜயை வறுத்தெடுத்த வட இந்தியர்கள்
பீஸ்ட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி லாஜிக் மீறல்களை வட இந்தியர்கள் கலாய்த்து எடுத்ததால் நேற்றிரவு டிவிட்டர் ரணகளமானது.
விஜய், நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவான பீஸ்ட் திரைப்படம் தமிழ் புத்தாண்டு அன்று வெளியானது. கே.ஜி.எஃப் திரைப்படத்துடன் தில்லாக ரிலீஸானாலும் தொய்வான காட்சிகள் காரணமாக ரசிகர்களிடமே வசையடி பெற்றது பீஸ்ட். மற்றொருபுறம் கே.ஜி.எஃப் 2 பீஸ்டை ஓரம்கட்டி வசூல் சாதனை படைத்தது.
என்னதான் ரசிகர்களும் மக்களும் ஏற்கவில்லை என்றாலும் பீஸ்ட் மிகப்பெரிய வெற்றி என திரைப்படக்குழுவினர் கொண்டாடிதான் வந்திருக்கின்றனர். ஆனால் சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான பீஸ்ட்டை பலர் ரசித்துப் பார்த்ததாக தெரிகிறது. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்று படக்குழு சொன்னதில் தவறில்லை என்று இணையத்தில் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கலாய்த்து வந்தனர்.
மேலும் படிக்க | ‘Rowdy Baby’ பாடலை முடக்கிய ஹேக்கர்ஸ்?- காரணம் என்ன?!
பீஸ்ட் திரைப்படத்தில் விமானப்படை விமானத்தில் பறந்தபடியே விஜய் சல்யூட் அடிப்பார். பாகிஸ்தானின் குண்டுகளை எதிர்த்து செல்லும் இந்திய விமானம் என கிளைமேக்ஸ் காட்சிகளில் ஏக லாஜிக் மீறல்கள் இருக்கும். இதனைப் பார்த்த இந்திய airforce வீரர் ஒருவர் அதனை டிவிட்டில் பதிவு செய்து “இதில் எனக்கு நிறைய கேள்விகள் இருக்கிறது” என்று எழுதியிருந்தார். அதனை அடுத்து மற்றொரு மேஜர் “லாஜிக்கை எல்லாம் குப்பையில் போட்டுவிட்டீர்களா?” என்று ட்வீட் செய்திருந்தார்.
இவர்களின் டுவீட்டைப் பார்த்த வட இந்தியர்கள் பீஸ்ட் படத்தை இணையத்தில் கலாய்க்கத் தொடங்கிவிட்டனர். “இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் பாலிவுட் படங்களில் லாஜிக் மீறல் காட்சிகளே இல்லையா?” என வெகுண்டெழுந்தனர். வட இந்தியர்களுடன் அஜித், சூரியா ரசிகர்களும் சேர்ந்து பீஸ்ட் படத்தை வறுத்தெடுத்ததால் டிவிட்டர் நேற்று இரவு ரத்தக்களறியாக இருந்தது.
மேலும் படிக்க | ஏகே 61 ஷூட்டிங் எப்போது நிறைவு... போனிகபூர் வெளியிட்ட அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR