ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் '2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 2.0. சுமார் 300 கோடி செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.


சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ரஜினி உடல்நிலை சரியின்றி வெளிநாட்டில் ஒய்வு எடுக்கும் போது, அவர் இல்லாத காட்சிகளை காட்சிப்படுத்தி வந்தார் இயக்குநர் ஷங்கர்.


தற்போது அமெரிக்காவில் சென்னை திரும்பியிருக்கும் ரஜினி, விரைவில் தொடங்கவிருக்கும் '2.0' படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறார். அதில் ரஜினி - அக்‌ஷய்குமார் சம்பந்தப்பட்ட சில முக்கிய காட்சிகளை காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார் ஷங்கர்.


இன்று ஷங்கர் பிறந்த நாளை முன்னிட்டு, லைக்கா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில் "நவம்பர் 2016-ல் '2.0' பர்ஸ்ட் லுக் வெளியாகும்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.