வீடியோக்கள் பார்க்க பயன்படுத்தப்படும் எம்எக்ஸ் பிளேயர் (MX player) ஆப்பிள் இனி விளம்பர இடையூறு இல்லாமல் பார்க்க வருடத்திற்கு 199 ரூபாய் என்ற கட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீடியோக்கள் பார்க்க 2011 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்டது எம்எக்ஸ் பிளேயர் (MX player) ஆப்.  முதலில் வீடியோக்கள் மட்டும் பார்க்க பயன்பட்ட எம்எக்ஸ் பிளேயர் பின்பு பாடல்கள் கேட்பதற்கான வசதியை அறிமுகப்படுத்தியது.  தனது அடுத்த அடுத்த அப்டேட்(Update)களில் பயனர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொடுத்தது. 



டைம்ஸ் இணையத்திற்கு சொந்தமான எம்எக்ஸ் பிளேயர் (MX player) ஸ்ட்ரீமிங் ஆப் தற்போது சப்ஸ்கிரிப்டீன் (Subscription) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.  எம்எக்ஸ் பிளேயர்(MX player) இன் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் கார்டல்(Cartel) என்ற தொடரின் மூலம் இந்த புதிய எம்எக்ஸ் பிளேயர் கோல்ட் (MX player Gold) என்ற சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.  இந்திய சந்தையில் ஓடிடி நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.  இதற்கு போட்டியாக தற்பொழுது எம்எக்ஸ் பிளேயர் (MX player) களமிறங்கியுள்ளது.  ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்க்கும் கம்மியான தொகையில் தனது கட்டணத்தை பயனர்களுக்கு வழங்க உள்ளது.  இந்த சேவை தற்போது ஆண்ட்ராய்ட் (Android )பயனாளர்களுக்கு மட்டுமே எனவும் தெரிவித்துள்ளது. 


எம்எக்ஸ் பிளேயர் (MX player) இல் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ், பாடல் வீடியோக்கள், கேம்ஸ், செய்திகள் என 100000+ மணி நேரங்களுக்கு அதிகமான பார்க்கக்கூடிய கண்டன்ட் (Content) வைத்துள்ளது.  10-கும் மேற்பட்ட பிராந்திய மொழிகளிலும் எம்எக்ஸ் பிளேயர் (MX player) சேவை உள்ளது. தற்பொழுது எம்எக்ஸ் பிளேயர் இல் வீடியோக்கள் பார்க்கும்பொழுது விளம்பர இடையூறுகள் நிற்கும்.  இந்த இடையூறுகள் இல்லாமல் பார்ப்பதற்கு எம்எக்ஸ் பிளேயர் கோல்ட் சப்ஸ்கிரைப் (MX player Gold subscription) செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.


டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், சோனி என பல்வேறு ஓடிடி தளங்கள் தற்போது உள்ள நிலையில் எம்எக்ஸ் பிளேயர் புதிதாக வந்து தனது ஆதிக்கத்தை செலுத்த உள்ளது. 2019-ம் ஆண்டு குயின் (Queen) என்ற வெப்சீரிஸ் எம்எக்ஸ் பிளேயர் வெளியாகி சில நாட்களிலேயே அதிகமாக பார்த்த வெப்சீரிஸ் என்ற சாதனை படைத்தது குறிப்பிடதக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR