பிரமாண்டமாக உருவாகும் பிரேமலு 2: வெளியீடு முக்கிய அப்டேட்
Premalu 2 Update: சமீபத்தில் பிரேமலு படம் ஓடிடியில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மேலும் ஒரு சூப்பர் அறிவிப்பையே அப்படத்தின் குழுவினர் வெளியிட்டு இருக்கிறது.
Premalu 2 Movie Update: சமீபத்தில் ரிலீஸ் ஆன சில மலையாள படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெற்ற திரைப்படம் பிரேமலு, அண்மையில் இந்த படம் ஓடிடியிலும் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந் நிலையில் தற்போது இந்த படம் தொடர்பாக மேலும் ஒரு சூப்பர் அறிவிப்பையே படக்குழுவினர் வெளியிட்டு இருக்கிறது. அதன் முழு விவரத்தை இந்த பதிவில் காண்போம்.
பிரேமலு:
கடந்த சில மாதங்களாக, தமிழ் நாட்டில் மலையாள திரைப்படங்கள் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றன. அப்படி வெளியாகி ஹிட் அடித்த படங்களுள் ஒன்று, பிரேமலு. இப்படம், உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் பெற்றதை தொடர்ந்து, இதன் ஓடிடி ரிலீஸிற்காக பலர் காத்துக்கொண்டிருந்தனர். அதன்படி கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது.
படக்குழு:
கிரிஷ் A D இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரீஷ் A D மற்றும் கிரண் ஜோசி இணைந்து எழுதியுள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார், விஷ்ணு விஜய் இசையமைக்க, ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
மேலும் படிக்க | Actor Dharshan: இளைஞர்களை கொள்ளை கொள்ளும் எண்ட ஓமனே ஆல்பம் பாடல்!
படத்தின் கதை:
GATE தேர்வுக்குத் தயாராவதற்காக ஹைதராபாத் நகருக்குச் செல்லும் பொறியியல் பட்டதாரி இளைஞனான சச்சினின் கதையை பிரேமலு விவரிக்கிறது. ஹைதராபாத்தில் அவன், ஐடி துறையில் பணிபுரியும் ரீனுவைச் சந்திக்கிறான், அவர்கள் நண்பர்களாகிறார்கள். சச்சின் ரீனுவை ஒருதலையாகக் காதலிக்க ஆரம்பிக்க, அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள், நம்மை ஒரு அழகான பயணத்திற்குக் கூட்டிச் செல்கிறது.
நஸ்லென், மமிதா, சங்கீத் பிரதாப், மற்றும் அகிலா பார்கவன், முதன்மைப்பாத்திரங்களில் அசத்தியுள்ளனர். "ஜேகே"யாக ஷியாம் மோகன் அனைவரையும் கவரும் அட்டகாச நடிப்பை வழங்கியுள்ளார். மீனாட்சி ரவீந்திரன், அல்தாஃப் சலீம், ஷமீர் கான் மற்றும் K S பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேத்யூ தாமஸ் ஒரு அழகான கேமியோவாக பாத்திரத்தில் தோன்றியுள்ளார். சியாம் புஷ்கரன் சிறு கதாபாத்திரத்தில் ரசிகர்களை மகிழ்விக்கிறார்.
பிரேமலு 2 அப்டேட்:
இந்நிலையில் தற்போது இந்த படம் தொடர்பாக படக்குழு முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி பிரேமலு 2 படம் உருவாக போகிறது என்றும், இந்த இரண்டாம் பாகம் வரும் 2025 ஆம் ஆண்டில் ரிலீஸ் ஆகும் என்றும் அதிகாரபூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ரஜினிகாந்தின் நிகர மதிப்பு! சென்னையில் மட்டுமே இத்தனை சொத்துக்களா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ