ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு அஜித் குமார் நடிப்பில் வலிமை திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. திரையரங்குகளே திருவிழா கோலம் பூண்ட காட்சிகள் கண்ணை கட்டியது. இதற்கு முன்பும் வினோத் இயக்கத்திலேயே அஜித் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து, மீண்டும் வினோத் இயக்கத்தில் #AK61 படத்தில் அஜித் குமார் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சிரஞ்சீவியின் காட்ஃபாதர் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்


அதற்கு முன்பு இயக்குனர் சிவாவுடன் இணைந்து நடிகர் அஜித் 3 படங்களில் நடித்தார். ஒரே இயக்குநர்களை வைத்து அஜித் தொடர்ந்து படம் நடித்து வருவதால் சினிமா வட்டாரம் மட்டும் இன்றி அவரின் ரசிகர்களும் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில் சமீபத்தில் #AK61 படம் தொடர்பான தகவர்கள் இணையத்தை ஆட்கொண்டது. அதாவது வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில்  #AK61 படப்பிடிப்பு பணிகள் தொடங்கவுள்ளதாகவும், அதற்கான பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.



இதனை தொடர்ந்து, தற்போது,  #AK62 படம் தொடர்பான தகவல்கள் சமூக வலைதளப்பக்கங்களில் வைரலாக பரவி வருகிறது. அதாவது, #AK62 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் எனவும், இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அனிரூத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வருகிறது. மேலும், இந்த வருட இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | சிவகார்த்திகேயனை ஃபாலோ செய்யும் ரஜினி?!


இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.நயன்தாராவுடன் கடைசியாக அஜித் விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார், அதற்கு முன்பு ஆரம்பம் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். வலிமை படத்தில் ஒரு பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் அறிவிப்பால் அவருடைய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR