பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்களிடத்தில் நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறது.  புதுவிதமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் விஜய் டிவி மற்ற சேனல்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது என்றே சொல்லலாம், அந்த அளவுக்கு அவற்றில் உள்ள நிகழ்ச்சிகள் மக்களிடத்தில் பிரபலமானவை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | மிகுந்த உற்சாகத்தில் ஹிப் ஹாப் தமிழா! இதுதான் காரணமா?


சூப்பர் சிங்கர், டான்ஸ் ஜோடி, Mr & Mrs சின்னத்திரை, ஸ்டார்ட் மியூசிக், கலக்க போவது யாரு போன்ற இன்னும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்களிடம் அதிகம் புகழ்பெற்றது.  அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான், இந்த நிகழ்ச்சிக்கு சிறுவர் முதல் பெரியவர் வரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.  ஒரு சமையல் நிகழ்ச்சி இவ்வளவு நகைச்சுவையோடு நடந்தது போன்று வேறு எந்த சமையல் நிகழ்ச்சியும் இதுவரை நடந்ததில்லை.



முதல் சீசன் பெற்ற வெற்றியை தொடர்ந்து, இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டு அதுவும் அளவுகடந்த வெற்றியை பெற்றது.  பலரின் மனநோய்க்கு மருந்தாக இருந்த இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவடைந்த பின் ரசிகர்கள் பலரும் சோகத்தில் மூழ்கினர் என்று தான் சொல்ல வேண்டும்.  எப்போது அடுத்த சீசன் தொடங்கும் என்று பலரும் பரிதவித்து வந்தனர்.  இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் இந்நிகழ்ச்சியின் மூன்றாவது பாகம் தொடங்கப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.


 



மேலும் இந்நிகழ்ச்சி குறித்த அதிகாரபூர்வ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.  அந்த வீடியோவில் மீண்டும் நடுவர்களாக தாமு மற்றும் வெங்கடேஷ் பட் உள்ளது உறுதியாகியுள்ளது.  மேலும் கோமாளிகளாக மக்களின் மனதை வென்ற ஷிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.  இருப்பினும் இதில் புகழ், சரத், ரக்ஷன் ஆகியோர் வீடியோவில் இல்லாதது ரசிகர்களிடத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.  இருப்பினும் இந்நிகழ்ச்சிக்காக பலரும் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | '83' படத்தை புகழ்ந்து தள்ளிய நடிகர் ரஜினிகாந்த் !


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR