ஹிப்ஹாப் தமிழாவின் அன்பறிவு பற்றிய சுவாரசியமான அப்டேட்!

ஹிப் ஹாப் தமிழா ஆதி, இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோருடன் கூட்டணி அமைத்ததை நினைத்து பெரும் உற்சாகத்தில் மிதந்து வருகிறார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 30, 2021, 04:52 PM IST
ஹிப்ஹாப் தமிழாவின் அன்பறிவு பற்றிய சுவாரசியமான அப்டேட்!  title=

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் "அன்பறிவு" (Anbarivu)  ஜனவரி 7, 2022 அன்று வெளியிடப்பட உள்ளது, இந்தப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் OTT தளத்தில் நேரடியாக களம் இறங்குகிறது. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் ஆதியின் முதல் படமா "அன்பரிவு" என்பது குறிப்பிடத்தக்கது. அன்பறிவு படத்தை அறிமுக இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கியுள்ளார் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இப்படம் குறித்த சுவாரஸ்ய தகவலை இயக்குநர் அஸ்வின் பகிர்ந்துள்ளார், அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அன்பரிவு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது முழுக்க முழுக்க நிரம்பி ரிலீசுக்கு தயாராக உள்ளது. படத்தின் இசை மற்றும் ஒலி வடிவமைப்பு குறித்து அஸ்வின் மகிழ்ச்சி தெரிவித்தார்.


ஆரம்பத்தில் ஆல்பம் பாடல்கள் வாயிலாக ரசிகர்களை கவர்ந்த ஹிப் ஹாப் தமிழா ஆதி 2015-ல் 'ஆம்பள' படத்தில் இசையமைத்ததன் மூலம் திரைத்துறையில் நுழைந்தார்.  பின்னர் பல படங்களுக்கு இசையமைத்து வந்தவர் 'மீசைய முறுக்கு' படத்தின் மெல்லாம் இயக்குனராகவும், கதாநாயகனாகவும் புதிய அவதாரமெடுத்தார்.  அஸ்வின் ராம் இயக்கத்தில், சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் நடிக்கும் அன்பறிவு திரைப்படம் ஜனவரி 7, 2022 முதல் Disney Plus Hotstar இயங்குதளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தில் ஷிவானி ராஜசேகர் மற்றும் காஷ்மீரா நாயகிகளாக நடித்துள்ளனர். நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத் ஆகியோருடன் விதார்த், தீனா, அர்ஜை, சரத் ரவி, வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.   

aadhi

இப்படம்  எதிர்வரும் புத்தாண்டின் முதல் வாரத்தில், ஒரு அட்டகாசமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக அமைய இருக்கிறது.  இப்படத்திலிருந்து ஏற்கனவே வெளியான போஸ்டர்கள், ட்ரைலர்  மற்றும் பாடல்கள் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த நிலையில், 2022 -ம் ஆண்டுக்கான படங்களின் விருப்ப பட்டியலில் இந்தப் படம் ரசிகர்களுக்கு முதல் தேர்வாகக் இருக்கும் என்று கூறப்படுகிறது.

aadhi

இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, திரைத்துறையின் இரண்டு முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அவரது இசையமைப்பில், யுவன் ஷங்கர் ராஜா பாடிய “அரக்கியே” இசைப் பிரியர்களை மெய்சிலிர்க்க வைத்த அதேவேளையில், சந்தோஷ் நாராயணன் பாடிய பாடலான ‘ரெடி ஸ்டெடி போ’ என்ற ஆல்பத்தின் புதிய சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு இந்த இரண்டு இசை ஜாம்பவான்களுடன் இணைந்திருக்கும் வாய்ப்பு கிடைத்ததை ஹிப்ஹாப் தமிழா ஆதி பெருமையாக நினைத்து மகிழ்ச்சியில் மிதந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | டிசம்பர்-31 அன்று வெளியாகும் 14 படங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News