நடிகர் ஜீவா நடிப்பில் உறுவாகியுள்ள சீறு திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சீறு. விஜய்சேதுபதி, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான றெக்க படத்தை இயக்கிய ரத்ன சிவா தற்போது ஜீவாவின் சீறு படத்தை இயக்கியுள்ளார். 


வெளியீட்டிற்கு தயாரான இத்திரைப்படம் முன்னதாக கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரும் பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுக நாயகி ரியா சுமன் நடித்துள்ளார். அறிந்தும் அறியாமலும் படத்தில் நாயகனாக அறிமுகமான நவ்தீப் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். மேலும், பப்பி படத்தின் ஹீரோ வருணும் இந்த படத்தில் எதிர்மறையான கதாப்பாத்திரம் ஏற்றுள்ளார்.



இசையமைப்பாளர் இமானின் பிறந்த நாளான இன்று அவர் இசையில் உருவாகியுள்ள சீறு படத்தின் டிரைலர் வெளியாகி இருப்பது கூடுதல் சிறப்பு. கடந்த ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கீ, கொரில்லா படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பதிவு செய்யவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஜீவாவின் சீறு, ஜிப்ஸி மற்றும் பாலிவுட் படமான 83 ஆகிய படங்கள் ரிலீசாகவுள்ளதால், ஜீவா மீண்டும் தனது இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.