அனல் பறக்கும் வசனங்களுடன் `கனா` படத்தின் trailer வெளியானது!
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கனா` படத்தின் trailer வெளியாகியுள்ளது!
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கனா' படத்தின் trailer வெளியாகியுள்ளது!
நடிகர் சிவகார்த்திகேயன் முதல்முறையாக தயாரிப்பாளராக மாறி, தனது கல்லூரி நண்பர்களில் ஒருவரான அருண்ராஜா காமராஜை இயக்குநராகவும், மற்றொருவரான திபு நினன் தாமஸை இசையமைப்பாளராகவும் அறிமுகம் செய்திருக்கும் திரைப்படம் `கனா'. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், ஐஷ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.
அவருக்கு அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். கிராமத்தில், சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணின் கிரிக்கெட் கனவு, மகளின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் தந்தை என்னும் பாசப்போராட்ட கதையினை படக்குழுவினர் கையில் எடுத்துள்ளனர்.
முன்னதாக இப்படத்தின் டீஸர், இசை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் trailer-னை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இத்திரைப்படமானது வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.