Cinema News: தீரன் இயக்கத்தில், அதிகர சத்யராஜ் (Actor Sathyaraj) நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் "தீர்ப்புகள் விற்கப்படும்". இந்த படத்தை ஹனி பீ கிரேஷன்ஸ் இன் அசோஸியேஷன் வித் இன்ஃபினிட்டி ஃப்ரேம்ஸ் ப்ரோடக்ஷன்ஸ்" என்ற பொது பேனரின் கீழ் ஹனி பீ கிரேஷன்ஸ் உரிமையாளர் சஜீவ் மீரா சாஹிப் மற்றும் இன்ஃபினிட்டி ஃப்ரேம்ஸ் ப்ரோடக்ஷன்ஸ் உரிமையாளர் கே.கே. சுதாகரன் ஆகிய நிறுவனங்களின் கூட்டாக தயாரித்தனர். உலகமெங்கும் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைப் பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் தற்போது இந்த படத்திற்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது கூட்டு ஒப்பந்தத்தின் படி இந்த படத்திற்காக இன்ஃபினிட்டி ஃப்ரேம்ஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் பணத்தை முழுமையாக முதலீடு செய்து, திரைப்படத்தின் ஆரம்பகட்ட முக்கியமான அனைத்து காட்சிகளையும் படமாக்கியது. இதன் தொடர்ச்சியாக, ஹனி பீ கிரேஷன்ஸ் நிறுவனத்திடம் பணம் இல்லாததால் தயாரிப்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. 


இதற்கிடையில், ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி அல்லாமல், இன்ஃபினிட்டி ஃப்ரேம்ஸ் ப்ரோடக்ஷன்ஸ் பெயரையும் இணை தயாரிப்பாளரான கே. கே. சுதாகரன் அவர்களின் பெயரையும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களில் சேர்க்காமல் ஹனிபீ கிரேஷன்ஸ் அவைகளை வெளியிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. 


ALSO READ | ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது கூழாங்கல்


இதனையடுத்து இருதரப்புக்கும் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், இன்ஃபினிட்டி ஃப்ரேம்ஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது. சிவில் வழக்கும் மோசடி செய்ததற்கு கிரிமினல் வழக்கும் பதியப்பட்டுள்ளது. இந்த இரு வழக்குகளும் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று கொண்டிருக்கிறது. 


இதற்கிடையில் சஜீவ் மீரா சாஹிப் மேற்கூறிய திரைப்படத்தின் மொத்த உரிமையையும் பங்குதாரரான கே. கே. சுதாகரன் அவர்களின் சம்மதம் இல்லாமல் சி.ஆர்.சலீம் (அல் டாரிஸ் மூவீஸ் உரிமையாளர்) என்பவரிடம் விற்று விட்டார். இது சட்ட விரோதமான மற்றும் அனுமதியற்ற உரிமை மாற்றலாகும். அல் டாரிஸ் மூவி தங்கள் பேனரின் கீழ் திரைப்படத்திற்கு தணிக்கையை பெற்று விட்டு இத்திரைப்படம் வருகிற டிசம்பர் 24, 2021 அன்று உலகளாவிய அளவில் தியேட்டர்களில் வெளியாகும் என போஸ்டர் மூலமாக அறிவித்துள்ளது. 



இதனிடையே இன்ஃபினிட்டி ஃப்ரேம்ஸ் ப்ரோடக்ஷன்ஸ் ஆலப்புழா மாவட்ட துணை நீதிமன்றத்தில் சஜீவ் மீரா சாஹிப் மற்றும் சி. ஆர். சலீம் எதிராக தொடுத்த வழக்கில் இரு பக்க வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் முடிவு எட்டும் வரை "தீர்ப்புகள் விற்கப்படும்" தமிழ் திரைப்படத்தை தியேட்டர்கள் மற்றும் ஓ.டி.டி. தளங்களில் வரும் 24 வெளியாக இருந்த நிலையில் அத்திரைப்படத்தை வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டார்.


ALSO READ | மாறி மாறி நன்றி சொல்லிக் கொண்ட சூர்யா கார்த்தி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR