முத்தையா இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், கார்த்தி, அதிதி ஷங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'விருமன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் துவங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு மூன்றே மாதங்களில் படக்குழு நிறைவு செய்துள்ளார்கள்.
கார்த்தியின் (Karti) அண்ணனான சூர்யா (Suriya) இந்த படத்ததை தயாரித்துள்ளார். மேலும் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் (Aditi Shankar) கதாநாயகியாக அறிமுகமாகிறார். முத்தைய, யுவன் கூட்டணி முதல் முறை இணைந்திருக்கும் படம் இது. 'கொம்பன்' படத்திற்குப் பிறகு கார்த்தி, முத்தையா கூட்டணி மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளது.
ALSO READ | மாஸ் காட்டும் சூர்யா..! 5 மொழிகளில் வெளியாகும் ’எதற்கும் துணிந்தவன்’
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இது குறித்து கார்த்தி ட்விட்டரில் கூறியதாவது, “விருமன்' நிறைவடைந்தது. இயக்குனர் முத்தையா, ஒளிப்பதிவாளர் செல்வகுமார் ஆகியோரது சரியான திட்டமிடல், நிர்வாகம். அதிதி ஷங்கருக்கு வாழ்த்துகள். உங்கள் அற்புதமான பயணத்திற்கு, கேரியருக்கு, நீங்கள் யதார்த்தமாக நடிக்கிறீர்கள். மீண்டும் யுவன் இருப்பது மகிழ்ச்சி. நன்றி தயாரிப்பாளர் சூர்யா, 2டி என்டர்டெயின்மென்ட், பை பை தேனி,” எனப் பதிவிட்டுள்ளார்.
#Viruman completed!
Great planning & execution by @dir_muthaiya & @selvakumarskdop.
Good luck @AditiShankarofl for a great career, enjoy the journey, you are a natural. So happy to have @thisisysr again!Nandri producer @Suriya_offl & @2D_ENTPVTLTD :)
Bye bye Theni. #விருமன் pic.twitter.com/7DBgGuz55h
— Actor Karthi (@Karthi_Offl) December 22, 2021
இதற்கு பதில் ட்வீட் செய்துள்ள சூர்யா., நன்றி ஹீரோ சார்…! மிகவும் ஆவலுடன் காத்திருக்கும் இயக்குனர் முத்தையா மற்றும் குழுவினர்!! #விருமன் எனப் பதிவிட்டுள்ளார்.
நன்றி Hero saar…! Director Muthaiya and team so looking forward!! #Viruman https://t.co/hrZ2SxXoQp
— Suriya Sivakumar (@Suriya_offl) December 22, 2021
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR