Varisu & Thunivu FDFS Ticket Rates: அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவும், விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள வாரிசும் பொங்கல் ஸ்பெஷல் படங்களாக ஜனவரி 11-ம் தேதி திரையரங்களில் வெளியாகிறது. ஜில்லா, வீரம் படத்தை அடுத்து கிட்டதட்ட 9 ஆண்டுகள் கழித்து விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது. இதனால் இருவரின் ரசிகர்களும் ஆவலுடன் படத்தை காண காத்திருக்கின்றனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்வேறு மாவட்டங்களில் ரசிகர்கள் கட்கவுட், பேனர்கள் வைத்து அசத்தி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாரிசு படத்தில் குடும்ப செண்டிமெண்ட், ஹீரோயிடம், காமெடி என தனது பழைய ஸ்டைலில் இறங்கியுள்ளார் விஜய். வம்சி இயக்கியுள்ள இந்தப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். விஜய்க்கு சம்பளமாக 120 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டதாக பேசப்படுகிறது. இந்தப்படம் தெலுங்கில் ஜனவரி 11-ம் தேதி வெளியாகவில்லை. மாற்றாக ஜனவரி 14-ம் தேதி வெளியாகிறது. தெலுங்கு திரையுலகினர் வாரிசு படம் அதிக தியேட்டர்களில் அங்கு வெளியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


அடுத்ததாக துணிவு படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. தனக்கே உரிய ஸ்டைலில், வில்லனிசம் என அசத்தியுள்ளார் அஜித். வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து படம் உருவாகியுள்ளதாக பேசப்படுகிறது. இந்தப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும் எக்கச்சக்கமாக உள்ளது. 


மேலும் படிக்க: துணிவு அப்டேட்; பெரிய அளவுக்கெல்லாம் எதிர்பார்க்காதீங்க...ஹெச். வினோத் நச் பதில்


இந்த நிலையில், கடலூரில் அஜித், விஜய் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியின் டிக்கெட் விலையை கேட்டு அதிர்ந்துள்ளனர். திரையரங்குகளில் ஆர்வமுடன் டிக்கெட் முன்பதிவு செய்ய சென்ற அவர்கள், அங்கு ஒரு டிக்கெட் விலை 750 ரூபாய் என்றதும் ஷாக்காகியுள்ளனர். பாதி பேர் டிக்கெட் வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். 



இப்போதெல்லாம் ரசிகர்கள் காட்சியின் டிக்கெட் விலை பலமடங்கு எப்போதும் உள்ள டிக்கெட் விலையை விட அதிகமாக விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்டங்களில் டிக்கெட் விலை 750 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், சென்னையில் 2000 ரூபாய் வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறதாம். விஜய், அஜித் ரசிகர்களில் பலர் டிக்கெட் விலை உயர்வால் முதல் நாள் முதல் காட்சியை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பலரும் தங்கள் அதிருப்திகளை ட்விட்டர் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு ஆகும் செலவை விட ஒரு டிக்கெட் விலை அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் புலம்பும் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே சமூக வலைதளங்களில் கேட்கிறது.



மேலும் படிக்க: சோதனை மேல் சோதனை... வாரிசு படத்துக்கு அடுத்த சிக்கல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ