1980 களின் இறுதியிலும் 1990 காலகட்டங்களிலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த தொடர் எதுவெனில் அது ராமாயணம் தொடராகத்தான் இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

78 எபிசோடுகளைக் கொண்ட இந்த தொடரானது தற்போது, நாடு முழுவதும் அமலில் உள்ள 21 நாட்கள் முடக்க நடவடிக்கை  நேரத்தில் மறு ஒளிபரப்ப உள்ளதாக மத்திய தொலைத் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.


 



 


மக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, சனிக்கிழமை, மார்ச் 28-ம் தேதி முதல், டிடி நேஷனல் தொலைக்காட்சியில், ராமாயணம் தொடர் ஒளிபரப்பப்படும் என்று மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். ஒரு பகுதி காலை 9 மணி முதல் 10 மணி வரையும், இன்னொரு பகுதி இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் ஒளிபரப்பாகும்" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ராமாயணத்தை டிடிநேஷ்னல் அலைவரிசையில் காலை 9 மணி மற்றும் இரவு 9 மணிக்குக் காணலாம் என்றும், மகாபாரதத்தினை டிடிபாரதி அலைவரிசையில் மத்தியம் 12 மணி மற்றும் இரவு 7 மணிக்குக் கண்டு ரசிக்கலாம் என்றும் ஜவடேகர் இன்று ட்விட் செய்திருந்தார்.


தற்செயலாக, ராமனின் சின்னமான பாத்திரத்தில் நடித்த அருண் கோவில், சீதா தேவியாக நடித்த தீபிகா சிக்காலியா, ராமநந்த் சாகரின் மகன் பிரேம் சாகர் ஆகியோருடன் லட்சுமணர் வேடத்தில் நடித்த சுனில் லஹ்ரி 'தி கபில் ஷர்மா ஷோ'வை அரங்கேற்றியது மற்றும் பார்வையாளர்கள் மூவரையும் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு ஒன்றாகப் பார்க்க விரும்பினர்.