`எனை நோக்கி பாயும் தோட்டா` படத்தின் புதிய அப்டேட்
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா`. இந்தப்படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் "எனை நோக்கி பாயும் தோட்டா". இந்தப்படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும், ஒன்ட்ராக எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை ரகசியமாக வைத்திருந்தது படக்குழு. சமீபத்தில் தர்புகா சிவா தான் இசையமைப்பாளர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், தற்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா' படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். டிசம்பருக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து, பிப்ரவரியில் வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறது படக்குழு.