ஹாலிவுட்டின் லெஜண்ட் இயக்குநர்களுள் ஒருவர் என அழைக்கப்படுபவர், கிரிஸ்டொஃபர் நோலன். இவர் இயக்கத்தில் இன்று ஓப்பன்ஹீமர் என்ற படம் வெளியாகியுள்ளது. அதற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள ட்விட்டர் விமர்சனங்கள், இதோ. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓப்பன்ஹீமர்:


அமெரிக்காவை சேர்ந்த அணு இயற்பியாளர் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹீமர் என்பவரின் வாழ்வைத்தழுவி எடுக்கப்பட்ட கதைதான் இது. இதில், ராபர்ட் ஓப்பன்ஹீமர் கதாப்பாத்திரத்தில் ‘பீக்கி ப்ளைண்டர்ஸ்’ தொடர் புகழ் சிலியன் மர்ஃபி நடித்துள்ளார். இவருடன் ஐயர்ன் மேனாக நடித்து பிரபலமான ராபர்ட் டவுனி ஜூனியரும் நடித்துள்ளார். ரசிகர்களின் மூளைக்கு தன் படம் மூலம் அதிகமாக வேலை கொடுத்து வந்த இயக்குநர், க்ரிஸ்டோஃபர் நோலன். இவரது சிறந்த படங்களாக கருதப்படும் சில படங்கள், கடைசி வரை சிலருக்கு பிடிக்காமலேயே போயுள்ளது. இந்த படமும் அந்த வரிசையில் அடங்கிவிட்டதா..? எப்படியிருக்கு ஓப்பன்ஹீமர், இதோ ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம்.


மேலும் படிக்க | ‘நோலன் படத்தில் நடிப்பதற்காக பகவத் கீதையை படித்தேன்..’ ஹாலிவுட் நடிகரின் அசத்தலான பழக்கம்..!


"படத்தை பார்க்கவில்லை..அனுபவித்தேன்..”


ஓப்பன்ஹீமர் படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், தான் படத்தை பார்க்கவில்லை எனவும் அந்த படத்தை அனுபவிக்க தொடங்கியதாகவும் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் படத்தை பார்க்கவில்லை, அனுபவிக்க தொடங்கினேன். பின்னணி இசை அருமை. ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ஒரே டென்ஷனான திரைக்கதையுடன் நகர்ந்தது. படத்தின் முடிவு உங்களை பாடாய் படுத்தும். ஆனால், படம் கொஞ்சம் நீளம். மொத்தத்தில் 10க்கு 8 மார்க் போடலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். 


ஒரு வரி விமர்சனம்:


படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் ஒரே வரியில் ஒரு விமர்சனத்தை கொடுத்துள்ளார். 



இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “படத்தின் மொத்த காட்சிகளும் பிரமிக்க வைத்தது” என குறிப்பிட்டுள்ளார். 


“விஞ்ஞானிகளின் உலகிற்கே அழைத்து சென்றது..”


ஒரு ரசிகர், ஓப்பன்ஹீமர் திரைப்படம் தன்னை விஞ்ஞானிகளின் உலகிற்கே அழைத்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார். 



இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “விஞ்ஞானிகளின் உலகிற்குள் பயணிக்க வைத்து ஓப்பன்ஹீமரின் வாழ்க்கையை காண்பித்து கடைசியில் அரசியல் கருத்துடன் முடிந்தது. முழுக்க முழுக்க ட்ராமாவும் உணர்வுகளும் நிரம்பிய படம். இறுதிவரை படம் போனதே தெரியவில்லை. நோலனின் எழுத்து திறமையை பாராட்டியே ஆக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


“எல்லா விருதுகளையும் இதற்குதான் தரவேண்டும்..”


ஒரு ரசிகர், ஆஸ்கர் விருது மட்டுமல்லாது இருக்கும் எல்லா விருதுகளையும் ஓப்பன்ஹீமர் படத்திற்கு தரவேண்டும் என தெரிவித்துள்ளார். 



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த வருடத்தின் ஆஸ்கரை மறந்துவிடுங்கள். ஓப்பன்ஹீமர் படத்திற்குதான் எல்லா விருதுகளும் கிடைக்க வேண்டும். படத்தின் நடிப்பு, காட்சிகள், இசை எல்லாமே என்னை வியக்க வைத்தது. படம் என்றால் இதுதான் படம். கண்டிப்பாக இந்த படத்தை ஐமேக்ஸ் திரையரங்கிள் பார்க்க வேண்டும்...” என்று குறிப்பிட்டுள்ளார். 


மேலும் படிக்க | ‘ப்ராஜெக்ட் கே’ படத்திற்கு விஷ்ணுவின் அவதாரம்தான் டைட்டில்..! ரசிகர்களின் ரியாக்‌ஷன் என்ன..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ