‘ப்ராஜெக்ட் கே’ படத்திற்கு விஷ்ணுவின் அவதாரம்தான் டைட்டில்..! ரசிகர்களின் ரியாக்‌ஷன் என்ன..?

Project K Title and First Glimpse: பிரபாஸ் நடித்துள்ள ப்ராஜெக்ட் கே படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ப்ராஜெக்ட் கே என்றால் என்ன என்பதற்கான விடையை படக்குழு வெளியிட்டுள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : Jul 21, 2023, 06:48 AM IST
  • பிரபாஸ் நடித்துள்ள படம், ப்ராஜெக்ட் கே.
  • இந்த படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகியுள்ளது.
  • கமல் இதில் வில்லனாக நடித்துள்ளார்.
‘ப்ராஜெக்ட் கே’ படத்திற்கு விஷ்ணுவின் அவதாரம்தான் டைட்டில்..! ரசிகர்களின் ரியாக்‌ஷன் என்ன..? title=

Project K Title and First Glimpse: ‘பெரிய பட்ஜெட்’ பட நடிகர் என சமீப காலமாக ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் பிரபாஸ், அடுத்து நடித்துள்ள மாபெரும் பான் இந்தியா திரைப்படம், ப்ராஜெக்ட் கே (Project K). இந்த படத்தை நாக் அஷ்வின் இயக்கியிருக்கிறார். இதன் முதல் க்ளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

Project  K என்றால் என்ன..?

ப்ராஜெக்ட் கே படக்குழுவினர் அனைவரும், அமெரிக்காவில் உள்ள சான் டியாகோ நாகருக்கு சென்றுள்ளனர். பெரிய பொருட்செலவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு, ப்ராஜெக்ட் கே என்றால் என்ன..? (What is Project K) என்ற தலைப்பில் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் அரங்கேறின. ப்ராஜெக்ட் கே படக்குழு, இதற்காக காமிக் புத்தகம், டீ சர்டுகள் போன்ற பல பொருட்களை படத்தின் பெயருடன் உருவாக்கியது. இதையடுத்து, இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணியளவில் இந்த ப்ராஜெக்ட் கே படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

க்ளிம்ஸ் வீடியோ:

ப்ராஜெக்ட் கே படக்குழு வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், படத்தின் நாயகி தீபிகா படுகோன், முக்கிய கதாப்பாத்திரமாக வரும் அமிதாப் பச்சன் ஆகியோர் அடங்கிய கூட்டம் யாரோ ஒரு கூட்டத்தினரிடம் மாட்டிக்கொண்டது போல காண்பிக்கப்பட்டுள்ளது. இவர்களை காப்பாற்ற வரும் விஞ்ஞானியாக வருகிறார், பிரபாஸ். 

இந்த வீடியோவின் இறுதியில் ஒருவர், “What is Project K..?” என்று கேட்க, அதற்கு பதில், Kalki (கல்கி) என்ற விஷ்ணுவின் கடைசி அவதாரம் பதிலாக திரையில் தோன்றுகிறது. கலியுகத்தின் விஷ்ணுவின் அவதாரமாக பார்க்கப்படும் கல்கி, 2898ஆம் வருடத்தில், கலி முத்திப்போகும் போது அவதாரம் எடுப்பது போல காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு, Kalki 2898 AD என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Kamal Haasan: அமெரிக்கா சென்ற கமல்ஹாசன்..! எதற்காக தெரியுமா..?

இந்த முறையும் விஷ்ணுவின் அவதாரம்!

தெலுங்கு நடிகர் பிரபாஸ், சமீபத்தில் ‘ஆதி புருஷ்’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இராமாயண கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தை, பிரபல இயக்குநர் ஓம் ராத் டைரக்டு செய்திருந்தார். விஷ்ணுவின் 7ஆவது அவதாரமான ராமர் கதாப்பாத்திரத்தில் பிரபாஸ் நடிக்க, சீதையாக கிருத்தி சனோன் நடித்திருந்தார். சயிஃப் அலிகான் வில்லன்-இராவணனின் கதாப்பாத்திரத்தில் வந்தார். இந்த படம், ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்ப்பை சந்தித்தது. இதைத்தொடர்ந்து படம் ரிலீஸாகி, போட்ட பணத்தில் பாதியை கூட வசூல் செய்யாமல் கடையை காலி செய்தது. பிராஜெக்ட் கே படத்தில் விஷ்ணுவின் கடைசி அவதாரம் என கூறப்படும் கல்கியாக பிரபாஸ் நடித்திருக்கிறார். இதற்கு பெரும்பாலான ரசிகர்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர். 

ரசிகர்கள் கருத்து:

நடிகர் பிரபாஸிற்கு, பாகுபலி படத்திற்கு பிறகு உலகம் முழுவதும் ரசிகர்கள் வந்துவிட்டனர். ஆனால், அவர்களுக்கு கூட ஆதி புருஷ் படத்தில் பிரபாஸ் ராமனாக நடித்தது பிடிக்கவில்லை. தற்போது வெளியாகியுள்ள ப்ராஜெக்ட் கே படத்தில் இவர் கல்கியாக நடித்திருப்பதற்கு ரசிகர்கள் க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளனர். சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதையாக இருப்பதால், படம் கண்டிப்பாக மாஸாக இருக்கும் என நம்பப்படுகிறது. 

போஸ்டரை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்:

ப்ராஜெக்ட் கே படத்தின் போஸ்டர் ஒன்றை படத்தின் தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி நெட்வர்க் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதில், பிரபாஸ் சூப்பர் ஹீரோ கணக்காக சூட் அணிந்து கொண்டு, தரையில் ஓங்கி ஒரு குத்து விடுவது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள், மார்வல் படத்தில் வரும் ஐயர்ன் மேனின் உருவத்தை காப்பி அடித்து இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டதாக, இரு புகைப்படங்களையும் ஒன்றாக வைத்து ட்ரோல் செய்தனர்.  இதையடுத்து அந்த தயாரிப்பு நிறுவனத்தின் பக்கத்திலிருந்து அந்த போஸ்டர் நீக்கப்பட்டு மீண்டும் சிறு மாறுதல்களுடன் அதே போஸ்டர் வெளியிடப்பட்டது. இது, இன்னும் ஒரு பெரிய பேசு பொருளாக மாறியது. 

வில்லனாக கமல்…!

ரசிகர்கள் மத்தியில் ‘உலக நாயகன்’ என்ற பெயரை பெற்ற கமல்ஹாசன், ப்ராஜெக்ட் கே படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்து, 150 கோடியை நடிகர் கமல் சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாவதாகவும் முதல் படத்தின் இறுதியில்தான் கமல் வரும் காட்சிகள் இடம் பெறும் என்றும் சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றது. 

ரிலீஸ் எப்போது..? 

சயின்ஸ் ஃபிக்‌ஷன் பாணியில் உருவாகி வரும் ப்ராஜெக்ட் கே திரைப்படம், எண்ணிலடங்கா கிராஃபிக்ஸ் காட்சிகளை கொண்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் பட வேலைகள் முடியும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. படம், அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி ஜனவரி மாதத்தில் 12ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | போஸ்டர் கூட காப்பியா..? ப்ராஜெக்ட் கே படத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News