Oscar 2024 Winners & Nominees Full List in Tamil :லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில், 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில், ஹாலிவுட் மட்டுமன்றி உலக சினிமா கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பல்வேறு படங்களுக்காக, பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா:


இந்த வருட ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை, ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். இது, அவர் தொகுத்து வழங்கும் 4வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சியாகும். ஓராண்டில் வெளியான படங்களில் சிறந்த படங்களை தேர்வு செய்து அதற்கு, ஒவ்வொரு பிரிவில் விருதுகள் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு வெளியான இரண்டு பெரிய ஹாலிவுட் படங்கள், ஓப்பன்ஹைமர் மற்றும் பார்பி. இந்த இரு படங்களுமே அதிக பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டன. இவ்விழாவில் அதிக விருதுகளை வென்ற படம் எது? எந்த படத்திற்கு எந்த விருது வழங்கப்பட்டது. முழு விவரங்களை இங்கு பார்ப்போம். 


ஓப்பன்ஹைமர் Vs பார்பி:


2024ஆஸ்கர் விருது விழாவில், ஓப்பன்ஹைமர் படம் 13 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டது. அதே போல, ரசிகர்களின் அமோக வரவேற்பினை பெற்ற பார்பி படமும் 8 பிரிவுகளில் நாமினேன் செய்யப்பட்டது. இந்த இரு படங்களை போல, புவர் திங்ஸ் படமும் நிறைய பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டிருந்தது. 



7 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஓப்பன்ஹைமர் திரைப்படம்:


>சிறந்த இயக்குநர்-கிரிஸ்டோஃபர் நோலன்
>சிறந்த நடிகர்-சில்லியன் மர்ஃபி
>சிறந்த துணை நடிகர்-ராபர்ட் டௌனி ஜூனியர்
>சிறந்த பிண்ணனி இசை-லுட்விக் கோரான்சன்
>சிறந்த படத்தொகுப்பு
>சிறந்த ஒளிப்பதிவு
>சிறந்த படம்



பார்பி படத்திற்கு விருது:


பார்ப்பி திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கடந்த ஆண்டு நல்ல வரவேற்பினை பெற்ற படமாக இருந்தது. இந்த படத்தில் மார்கோட் ராபி நடித்திருந்தார். இப்படம், ஒரே ஒரு ஆஸ்கர் விருதினை மட்டுமே வென்றிருக்கிறது. இப்படத்தில் இடம் பெற்றிருந்த “What Was I Made For?” என்ற பாடலுக்காக பாடகி பில்லி ஐலிஷ் இந்த விருதினை வென்றிருக்கிறார். இவருக்கு தற்போது 22 வயதாகிறது. இதுவரை இவர் இரண்டு முறை ஆஸ்கர் விருதினை வென்றிருக்கிறார். 87 வருடங்களில் இரண்டு முறை ஆஸ்கர் விருது வென்ற இளம் கலைஞர் எனும் சாதனையை இவர் இதன் மூலம் படைத்திருக்கிறார் (Oscar Awards 2024 Winners List). 


முழு பட்டியல்..


ஆஸ்கர் விருதுகளை அள்ளிய படங்களின் முழு பட்டியலை இங்கு பார்க்கலாம்.


சிறந்த படம்:


>அமெரிக்கன் ஃபிக்‌ஷன்
>அனாடமி ஆஃப் அ ஃபால்
>பார்பி
>தி ஹோலோவர்ஸ்
>கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்
>மாஸ்டீரியோ
>ஓப்பன்ஹைமர்



சிறந்த இயக்குநருக்கான விருது


>ஜஸ்டின் ட்ரீட்-அனாடமி ஆஃப் அ ஃபால்
>மார்டி ஸ்கார்சீஸ்-கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்
>கிரிஸ்டோஃபர் நோலன்-ஓப்பன்ஹைமர்
>யோர்கோஸ் லாந்திமோஸ்-புவர் திங்க்ஸ்
>ஜானதன் க்ளேசர்-தி சோன் ஆஃப் இண்ட்ரெஸ்ட்


சிறந்த நடிகருக்கான விருது:


>பிராட்லி கூப்பர்-மஸ்டீரியோ
>சில்லியன் மர்ஃபி-ஓப்பன்ஹைமர்
>கோல்மன் டோமிங்கோ-ரஸ்டின்
>பால் கைமதி-தி ஹோல்டோவர்ஸ்
>ஜெஃப்ரி ரைட்-அமெரிக்கன் ஃபிக்‌ஷன்


சிறந்த நடிகைக்கான விருது:


>எம்மா ஸ்டோன்-புவர் திங்க்ஸ்
>ஆனட் பென்னிங்-நைட்
>லில்லி க்ளாட்ஸ்டோன்-கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்
>சாண்ட்ரா ஹூலர்-அனாடமி ஆஃப் அ ஃபால்
>கேரி முல்லிகன்-மஸ்டீரியோ


சிறந்த துணை நடிகைக்கான விருது
>டேவின் ஜாய் ராண்டால்ஃப்-தி ஹோட்லோவர்ஸ்
>எமிலி ப்ளண்ட்-ஓப்பன்ஹைமர்
>டேனியல் ப்ரூக்ஸ்-தி கலர் பர்புள்
>அமெரிக்கா வெர்ராரா-பார்பி
>ஜோடி ஃபாஸ்டர்-நைட்


மேலும் படிக்க | மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ள அமீகோ கேரேஜ்! மார்ச் 15ம் தேதி வெளியாகிறது!


பிற வெற்றியாளர்கள்:


>சிறந்த முழு நீள திரைப்படம் (Best Feature Film): தி பாய் அண்ட் தி ஹெரான் 
>சிறந்த ஒளிப்பதிவு: ஓப்பன்ஹைமர்-ஹொய்டே வான் ஹய்டெமா
>சிறந்த ஆடை வடிவமைப்பு:புவர் திங்க்ஸ்-ஹாலி வாடிங்டன்
>சிறந்த இயக்குநர்:கிரிஸ்டோஃபர் நோலன்-ஒப்பன்ஹைமர்
>சிறந்த டாக்குமெண்டரி படம்-20 டேஸ் இன் மாரியுபோல்


>சிறந்த குறும்பட டாக்குமெண்டரி-தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப்
>சிறந்த சர்வதேச முழுநீள திரைப்படம்-தி சோன் ஆஃப் இண்ட்ரெஸ்ட்
>சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்-புவர் திங்க்ஸ்-நாடியா ஸ்டேசி
>சிறந்த இசை (Original Score)-வாட் வாஸ் ஐ மேட் ஃபார்?-பில்லி ஐலிஷ்
>சிறந்த படம்-ஓப்பன் ஹைமர்-கிரிஸ்டோஃபர் நோலன்
>சிறந்த கலை இயக்கம்-புவர் திங்க்ஸ்-ஜேம்ஸ் பிரின்ஸ்


>சிறந்த அனிமேஷன் குறும்படம்  : வார் இஸ் ஓவர் -டேவ் மல்லின்ஸ் மற்றும் பிராட் ப்ரூக்கர்
>சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்: தி வண்டர்ஃபுல் ஸ்டோரி ஆஃப் ஹெண்ட்ரி சுகர்
>சிறந்த இசை : தி சோன் ஆஃப் இண்ட்ரெஸ்ட்-டாண்ட் வில்லர்ஸ் மற்றும் ஜோனி பர்ன்
>சிறந்த காட்சி அமைப்புகள் : காட்சில்லா மைனஸ் ஒன்
>சிறந்த எழுத்து (ADAPTED SCREENPLAY) : அமெரிக்கன் ஃபிக்‌ஷன் 
>சிறந்த எழுத்து (ORIGINAL SCREENPLAY) : அனாடமி ஆஃப் அ ஃபால்


மேலும் படிக்க | Oscars 2024 : ஆஸ்கர் மேடையில் ஆடையின்றி நின்ற ஜான் சீனா! அதிர்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ