அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2022-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கியது. இதில் முன்னணி ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் டெனிஸ் வில்லெனுவ் இயக்கத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற DUNE திரைப்படம் 6 ஆஸ்கர் விருதுகளை தட்டிச்சென்றது. சிறந்த ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, தயாரிப்பு வடிவமைப்பு, விஷூவல் எபக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் DUNE திரைப்படம் ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'West Side Story' திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை அரியான டிபோஸ் வென்றார். 'Coda' படத்தில் நடித்த ட்ராய் கோட்சருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த ஆடை வடிவமைப்பளருக்கான ஆஸ்கர் விருதை ஜென்னி பீவன் வென்றார். Cruella திரைப்படத்துக்காக அவருக்கு இந்த விருது கிடைத்தது. இதேபோல் சிறந்த அனிமேஷனுக்கான ஆஸ்கர் விருதை என்கான்டோ திரைப்படமும், சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை தி குயின் ஆஃப் பேஸ்கட்பால் திரைப்படமும் தட்டிச்சென்றன. 


மேலும் படிக்க | இந்தியாவுக்கு முதல் ஆஸ்கர் பெற்று தந்த பானு அதையா 91 வயதில் காலமானார்...


பிரபல ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித் முதன் முறையாக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். 'King Richard' படத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. பிரபல டென்னிஸ் விளையாட்டு வீராங்கனைகள் வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் செரினா வில்லியம்ஸ் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இதுவாகும். 



53 வயதாகும் வில் ஸ்மித் 1986-ம் ஆண்டு முதல் திரைத்துறையில் இருந்து வருகிறார். இதுவரை 2 முறை சிறந்த நடிகருக்காக அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு விருது கிடைக்கவில்லை. மிக நீண்ட காத்திருப்புக்கு பிறகு ஆஸ்கர் விருதை வென்ற வில் ஸ்மித், மகிழ்ச்சியில் திளைப்பதற்கு பதிலாக விழா மேடையிலேயே கோபப்பட்ட சம்பவம் அரங்கேறியது. 


நகைச்சுவை நடிகரும், ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான கிறிஸ் ராக், வில் ஸ்மித் மனைவியின்  Hair Style பற்றி கிண்டல் அடித்தார். இதனால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித், கிறிஸ் ராக்கை மேடையில் ஏறி கன்னத்திலேயே ஓங்கி அறைந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டபோது இந்த சம்பவம் நடைபெற்றது.


 


 



 


அதே நேரம், இது முன்னரே முடிவு செய்யப்பட்டு பப்ளிசிட்டிக்காக அரங்கேற்றப்பட்ட ஒன்று என்வும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இது தொடர்பாக ஆஸ்கர் விழா ஏற்பாட்டாளர்கள் தரப்பில் விளக்கம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பவம் ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


மேலும் படிக்க | OSCAR Award 2022: கொரோனாவுக்கு மத்தியிலும் ஆஸ்கர் விருது விழா கோலாகலம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR