Oscars 2023: உலகின் மிகவும் மதிப்புமிக்க திரைப்பட விருது நிகழ்ச்சிகளில் ஒன்றான ஆஸ்கார் 2023 விருது விழா இந்த வார கடைசியில் நடைபெற உள்ளது. 95ஆவது ஆஸ்கார் விருது விழா மார்ச் 12 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறகிறது. இந்நிகழ்வு உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட பிரதேசங்களில் நேரடி ஒளிப்பரப்பாக உள்ளது. பார்வையாளர்கள் ஆஸ்கார் 2023 விருது விழாவை எங்கு எப்போது பார்க்கலாம் என்ற முழு விவரத்தை இங்கே காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எப்போது, எங்கு பார்க்க வேண்டும்?


லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறும் 95ஆவது ஆஸ்கார் விருது விழா, இந்திய பார்வையாளர்களுக்காக மார்ச் 13, 2023 அன்று காலை 5.30 மணிக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பப்படும். பார்வையாளர்கள் ஏபிசி சேனலில் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பைப் பார்க்கலாம் அல்லது ஆன்லைனில் abc.com அல்லது ABC ஆஃப் மூலமும் பார்க்கலாம். 


மேலும் படிக்க | புஷ்பா 2: சமந்தாவுக்கு பதிலாக வசூலில் அள்ளுவாரா சாய் பல்லவி? அல்லு அர்ஜூனின் ஜோடி யார்?


இந்திய திரைப்படங்கள்


இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் படங்களைப் பொறுத்தவரை, ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைகளில் உள்ளது. அந்த படத்தின் "நாட்டு நாட்டு" பாடல் ஆஸ்கார் விருது விழா மேடையில் நேரடியாக ஒளிபரப்பப்படும். மேலும் இது சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதில் பரிந்துரைக்கப்பட்டது. 


ஷௌனக் சென் எழுதிய 'ஆல் தட் ப்ரீத்ஸ்' சிறந்த ஆவணப்படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டது. மேலும் கார்த்திகி கோன்சால்வ்ஸின் 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' சிறந்த ஆவணப்பட குறும்படமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


விழாவின் தொகுப்பாளர்


2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகள் விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பின்னர், தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான ஜிம்மி கிம்மல் மீண்டும் ஆஸ்கார் விருதை இந்தாண்டு தொகுத்து வழங்குவார். ஜெர்ரி லூயிஸ், ஸ்டீவ் மார்ட்டின், கான்ராட் நாகல் மற்றும் டேவிட் நிவன் ஆகியோரும் அகாடமி விருதுகளை வழங்குவார்கள். வூப்பி கோல்ட்பர்க் மற்றும் ஜாக் லெமன், ஜானி கார்சன், பில்லி கிரிஸ்டல் மற்றும் பாப் ஹோப் ஆகியோர் மூன்று முறைக்கு மேல் தொகுத்து வழங்கியவர்களில் அடங்குவர்.


வாக்களித்த முதல் தமிழர்


இந்த ஆஸ்கார் விருதுகளுக்கு, அகாடமி உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். அதன்பேரில்தான், விருதுகள் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில், நடிகர் சூர்யா முதன்முறையாக தனது ஆஸ்கார் விருது விழாவின் வாக்கினை செலுத்தியதாக ட்விட்டரில் நேற்று அறிவித்தார்.


மேலும் படிக்க | 'இந்தியன் 2’ சண்டைப் பயிற்சியாளர்களுடன் கமல்ஹாசன்: ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ