திரையரங்கம் & ஓடிடி... இந்த வாரம் வெளியாகும் முக்கிய படங்கள் என்னென்ன?
May 12 OTT And Theatre Release Tamil Movie: திரையரங்குகளிலும்; அமெசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களிலும் நாளை வெளியாக உள்ள முக்கிய தமிழ் திரைப்படங்கள், பிறமொழி திரைப்படங்கள், ஆங்கில சீரிஸ்கள் குறித்த தகவல்களை இதில் காணலாம்.
May 12 OTT And Theatre Release Tamil Movie: மே 12ஆம் தேதியான நாளை பல்வேறு தமிழ் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. அதுமட்டுமின்றி, பல்வேறு தமிழ், மலையாள, இந்தி படங்களும் ஓடிடியில் நாளை வெளியாக உள்ளன. இந்நிலையில், திரையரங்கம், ஓடிடி ஆகியவற்றில் நாளை வெளியாக உள்ள முக்கிய திரைப்படங்கள் குறித்த முழு விவரங்களை இதில் தெரிந்துகொள்ளலாம்.
திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்கள்
கஸ்டடி: தமிழ், தெலுங்கில் வெங்கட் பிரபு உருவாக்கத்தில் தயாராகி உள்ள 'கஸ்டடி' நாளை வெளியாக உள்ளது. இத்திரைப்படத்திற்கு இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். நாக சைதன்யா - க்ரித்த ஷெட்டி ஆகியோர் இதில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராவண கோட்டம்: 'மதயானை கூட்டம்' படத்தின் இயக்குநரான விக்ரம் சுகுமாரனின் இரண்டாவது திரைப்படம் 'ராவண கோட்டம்'. பல ஆண்டுகள் கழித்து அவரின் படம் நாளை வெளியாக உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதில், சாந்தனு, கயல் ஆனந்தி, பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஃபர்ஹானா: பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களின் எதிர்ப்புகளுக்கு இடையே ஐஸ்வர்யா ராஜேஷ், செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஃபர்ஹானா' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.
குட் நைட்: ஜெய் பீம் மூலம் நன்கு பரிட்சயமான நடிகர் மணிகண்டன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த 'குட் நைட்'. குறட்டை வாழ்விற்கு எவ்வளவு முக்கியம் என்பதை இப்படம் பேசுவதாக கூறப்படும் நிலையில், இத்திரைப்படம் நாளை வெளியாகிறது.
மேலும் படிக்க | அடேங்கப்பா..சமந்தா வாங்கிய புதிய பிரமாண்ட வீடு..இவ்வளவு கோடியா?
ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள்
நெட்பிளிக்ஸ்: அருள் நிதி நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'திருவின் குரல்'; ஜெனிஃபர் லோபஸ் நடிப்பில் உருவான ஹாலிவுட் திரைப்படம் 'தி மதர்' உள்ளிட்ட திரைப்படங்கள் நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகின்றன. 'குயின் கிளியோபெட்ரா', 'மிஸ்ஸிங் டெட் ஆர் அலைவ்' ஆகிய ஆங்கில சிரீஸ்களும் நாளை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகின்றன.
அமேசான் பிரைம்: பாண்டிய மன்னர்களின் வரலாறு பேசும் 'யாத்திசை'; சமந்தாவின் 'சாகுந்தலம்'; மலையாளத் திரைப்படம் 'விசித்திரம்'; கொரியன் திரைப்படம் 'தி பாயிண்ட் மேன்'; ஆங்கில திரைப்படம் 'ஏர் மூவி' ஆகிய படங்கள் நாளை அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகின்றன. கைதி படத்தின் இந்தி ரீமேக்கான 'போலா' அமேசான் பிரைம் ரென்ட் (Prime Rent) வசதியில் மட்டும் ஸ்ட்ரீம் ஆகும்.
இதர ஓடிடி: ராகவா லாரன்ஸின் ருத்ரன் திரைப்படம் சன் நெக்ஸ்ட் தளத்திலும், ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பனா சுந்தரி, இந்தி விக்ரம் வேதா திரைப்படம் ஜியோ சினிமாஸ் தளத்திலும் வெளியாகின்றன.
மேலும் படிக்க | வெளியானது கேப்டன் மில்லர் அப்டேட் ...தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ