விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்திசுரேஷ் இணைந்து நடித்து வரும் படம், 'தானா சேர்ந்த கூட்டம்'. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல ஆண்டுகளுக்குப் பிறகு, செந்தில் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். இவரைத் தவிர ரம்யா கிருஷ்ணன், சரண்யா, கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.ஜே.பாலாஜி, தம்பிராமையா, சத்யன், சுரேஷ் சந்திர மேனன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துவருகிறது. அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவுப் பணிகளை தினேஷ் கிருஷ்ணாவும், படத்தொகுப்பை ஶ்ரீகர் பிரசாத்தும் கவனித்துவருகிறார்கள். 


தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டியுள்ள நிலையில், நகைச்சுவை நடிகர் செந்தில், தனது 66-வது பிறந்தநாளை படக் குழுவினருடன் நேற்று கொண்டாடினார்.