இந்தியா முழுவதுமே கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. இத்தகைய சூழலில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடுவது அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நாடு முழுவதும் அதிகமாகி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம் நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு தேவைப்படற தடுப்பூசிகளை (Corona Vaccine) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஏன் செஞ்சீங்கய்யா? என்று பிரதமர் மோடியை (PM Modi) விமர்சிக்கும் வகையில், டெல்லியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இது குறித்து பல காவல் நிலையங்களில் புகார் செய்து வந்தனர். இந்த புகாரின் பேரில் அந்த போஸ்டர்களை ஒட்டிய 20 பேரை போலீசார் கைது செய்தனர்.


ALSO READ | Corona Second Wave: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடப்பட்டது


இதையடுத்து #ArrestMetoo “என்னையும் கைது செய்யுங்கள்” என்று ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ராகுல் காந்தி ட்வீட் செய்திருந்தார். இந்த ட்விட் பதிவு உலக முழுவதும் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில் தற்போது நடிகை ஓவியா (Oviya), டெல்லியில் பிரதமர் மோட்டிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ததை கண்டித்து, இது ஜனநாயகமா எனக் கேள்வி எழுப்பி #ArrestMetoo என்ற ஹேஷ் டேக்கையும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். 


 



 


ஒரு தென்னிந்திய நடிகை இப்படி தைரியமாக பேசுவதை முதல்முறையாக பார்க்கிறோம் என்று ஓவியாவின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறி வருகின்றனர்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR