ஆண் குழந்தையை சொல்லிக்கொடுத்து வளருங்கள் - ஓவியா அட்வைஸ்
பெண் குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று ஆண் குழந்தைகளிடம் சொல்லிக்கொடுத்து பெற்றோர் வளர்க்க வேண்டுமென்று நடிகை ஓவியா கூறியிருக்கிறார்.
களவாணி படம் மூலம் அறிமுகமானவர் ஓவியா. சினிமா மூலம் பிரபலமடைந்ததவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் அவர் மிக பிரபலமானார்.
அவருக்கென்று ரசிகர்கள் தனி ஆர்மியையும் ஆரம்பித்து மாஸ் காட்டினர். தற்போது பெரிதாக அவருக்கு பட வாய்ப்புகள் இல்லையென்றாலும் தனியார் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்திவருகிறார். மேலும் அவர் தனது கருத்துக்களை எந்தவித தயக்கமுமின்றி கூறுபவர்.
இந்நிலையில், கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஓவியா பேசுகையில், “கலாசாரம் என்ற பெயரில் எதையும் மறைக்க வேண்டாம். அனைத்தையும் வெளிப்படையாக பேச வேண்டும். அப்போதுதான் தீர்வு கிடைக்கும்.
மேலும் படிக்க | AK51 அன்று வருகிறது AK61 அப்டேட்?
பெண் குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் ஆண் பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். சிறுவயதிலேயே அவ்வாறு வளர்த்தால் எந்தவிதமான குற்ற செயல்பாடுகளிலும் ஆண்கள் ஈடுபட மாட்டார்கள்” என்றார்.
மேலும் படிக்க | விக்னேஷ் சிவனை சைக்கோ என்று திட்டிய நயன்தாரா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR