AK51 அன்று வருகிறது AK61 அப்டேட்?

மே-1ம் தேதி அஜித் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கப்போகும் படங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Apr 30, 2022, 10:58 AM IST
  • வலிமை படம் சமீபத்தில் வெளியானது.
  • தற்போது ak61 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
  • நாளை அஜித்தின் 51வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
AK51 அன்று வருகிறது AK61 அப்டேட்? title=

ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் அஜித்குமாருக்கு நாளைய தினம் மே-1ம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.  இவரது படங்கள் ஒவ்வொன்றும் வெளியாகும்போதும் ரசிகர்கள் எவ்வளவு உற்சாகமாக இருப்பார்களோ அதேபோல அவரது பிறந்தநாளும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய ஒரு நாள் தான். அஜித் ரசிகர்கள் பலரும் சமூக வலைதள கணக்குகளில் ஒரே மாதிரியான ப்ரொபைல் பிக்சர்களை வைப்பது, கேக் வெட்டுவது, கட் அவுட் வைப்பது போன்று அவர்களால் முடிந்ததை செய்து அவரது பிறந்தநாளை கொண்டாடுவார்கள்.  

ajith

மேலும் படிக்க | விக்னேஷ் சிவனை சைக்கோ என்று திட்டிய நயன்தாரா!

நாளை அவரது 51வது பிறந்தநாள், இந்த தினத்தில் ரசிகர்களுக்கு என்ன சர்ப்ரைஸ் கொடுக்க போகிறார் என்று பலரும் காத்திருக்கின்றனர்.  நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'ஏகே61' படம் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இரட்டை வேடங்களில் அஜித் நடிப்பதாக கூறப்படும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார், தற்காலிகமாக 'ஏகே61' என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படத்தின் டைட்டில் அல்லது ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கப்போகும் 'ஏகே62' படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக விஜய் சேதுபதியை நடிக்க வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.  ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடித்து வந்த அஜித் தற்போது அடுத்தடுத்து வரிசையாக படங்களில் கமிட் ஆகியுள்ளார்.  அடுத்ததாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கப்போவதாக சில செய்திகள் வெளியாகியுள்ளது, இப்படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அப்டேட்டுகள் வந்தாலும் வராவிட்டாலும் அஜித் பிறந்தநாள் என்றாலே அவரது ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான், அந்நாளில் இவரது படம் குறித்த அப்டேட் எதாவது ஒன்று வெளியானால் அது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமையும்.

மேலும் படிக்க | FlashBack: இன்று நடிகர் அஜித்-க்கு மகிழ்ச்சியான நாள்... ரசிகர்களுக்கோ துக்க தினம்... காரணம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News