களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. அவர் சமீபத்தில் கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியாவுக்கு நிறைய பட வாய்ப்புகளும் வர தொடங்கி உள்ளன. தற்போது, ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா 3 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திலிருந்து ஓவியா விலகிவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதை காஞ்சனா 3 படக்குழு மறுத்துள்ளது. 


இந்நிலையில் ஓவியா, காஞ்சனா 3 படத்தில் லாரன்ஸ் உடன் தொடர்ந்து நடித்து வருகிறார். அதை நிரூபிக்கும் வகையில் போட்டோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளன.