பத்மாவதி திரைப்படத்திற்கு டெல்லி திரைப்பட தனிக்கை குழு, U/A சான்றிதழினை  அளித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு பத்மாவத் என்று பெயர் சூட்டுமாறும் பரிந்துறைத்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சித்தூர் ராணி பத்மினியின் கதையினை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சினிமாவாக படமாக்கப்பட்டுள்ளது. 


இந்த படத்தினை பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் இயக்க, நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்துள்ளார். இப்படத்தில் சித்தூர் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் ராஜ புத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.


மேலும் இப்படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே தலையையோ அல்லது படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பஞ்சாலி தலையையோ கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினர்.


இதனையடுத்து படத்தின் வெளியீடு தேதியை தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்துள்ளது. மேலும் அரியானா மாநில பாரதீய ஜனதாவின் தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளர் சுராஜ் பால் அமு., பத்மாவதி படம் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்.  தீபிகா மற்றும் பன்சாலியின் தலைக்கு ரூ. 5 கோடி பரிசு அறிவித்த மீரட் இளைஞருக்கு பாராட்டு தெரிவிக்க விரும்புவதாக குறிப்பிட்டார். 


இத்திரைப்படம் குறித்து தொடர்ந்து பல சர்சைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது இப்படத்திற்கு U/A சான்றிதழினை டெல்லி திரைப்பட தனிக்கை குழு அளித்துள்ளது. மேலும் பத்மாவத் என்று பெயர் சூட்டுமாறும் பரிந்துறைத்துள்ளது!