இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் ‘பத்மாவதி’ இந்தியாவில் மட்டுமே 8 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் அக்டோபர் மாத இறுதிக்குள் வெளியாகவுள்ளது. படத்தை பன்சாலி மற்றும் வயாகாம் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது ஒரு வரலாற்றுக் கதை. ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ராணி பத்மாவதியின் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தில், பத்மாவதி வேடத்தில் தீபிகா படுகோனும், அவரைக் கவர்ந்து செல்ல முயலும் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி வேடத்தில் ரன்வீர் சிங்கும் நடிக்கின்றனர். மேலும் இப்படம் ஆங்கிலத்திலும் வெளியிடப்படவுள்ளது.


இந்நிலையில் இப்படத்தின் பத்மாவதி வேடத்தில் நடித்து இருக்கும் தீபிகா படுகோனின் ஃப்ரஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. மேலும் இப்படம் டிசம்பர் 1-ம் தேதி வெளியாக உள்ளது.