Pagalariyaan Movie Review: நடிகர் வெற்றி தனது எதார்த்தமான நடிப்பால் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அவரது நடிப்பில் இன்று வெளியாகி உள்ள படம் பகலறியான். முருகன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் வெற்றி, அக்ஷயா கந்தமுதன், சாப்ளின் பாலு, சாய் தீனா, முருகன், வினு பிரியா ஆகியோர் நடித்துள்ளனர். ரிஷிகேஷ் என்டர்டைன்மென்ட் பேனரில் லதா முருகன் இந்த படத்தை தயாரித்துள்ளார். விவேக் சரோ இசையமைக்க, அபிலாஷ் ஒளிப்பதிவு செய்ய, குரு பிரதீப் எடிட்டிங் செய்துள்ளார். விக்னேஷ் குணசேகர் இந்த படத்தில் முருகனுடன் இணைந்து கதை எழுதி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரே இரவில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. மூன்று வெவ்வேறு ரவுடி கும்பல்களுக்கு இடையில் நடக்கும் கதையை வித்தியாசமான முறையில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் முருகன். ஒருபுறம் கதாநாயகன் வெற்றி தான் காதலித்த பெண்ணை வீட்டிற்கு தெரியாமல் கூட்டி செல்கிறார். மறுபுறம் ஒரு ரவுடி தனது தங்கையை காணவில்லை என்று ஊர் முழுக்க தனது அடியாட்களை வைத்து தேடி வருகிறார். அதே சமயம் இவரைக் கொல்ல வேண்டும் என்று மற்றொரு கும்பல் ஆட்களை அனுப்புகிறது. இந்த மூன்று கதைகளும் இறுதியில் ஒரே இடத்தில் இணைகிறது. 


மேலும் படிக்க - Dharsha Gupta: ஆங்கில படங்களை மிஞ்சும் கிளாமர்..அசத்தும் தர்ஷா குப்தா!


கைதி போன்று ஒரே இரவில் நடக்கும் கேங்ஸ்டர் கதையை தனது பாணியில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் முருகன். ஆனால் அதில் வெற்றி பெற்றாரா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. படத்தின் கிளைமாக்ஸ்ல் வரும் ட்விஸ்ட் போல படம் முழுக்க யோசித்து வைத்திருந்திருக்கலாம். பல இடங்களில் கதை எதை நோக்கி செல்கிறது என்று புரியாமல் உள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் டீடைலிங் செய்ய தவறியுள்ளனர். 


போலீசாக வரும் சாய் தீனாவை வைத்து வரும் சில காட்சிகள் சிரிக்கும் படி இருந்தது. அதே போல படம் முழுக்க வரும் சண்டை காட்சிகளும் நன்றாக எடுக்கப்பட்டிருந்தது. ஸ்டண்ட் மாஸ்டர் ராம்குமாருக்கு தனி பாராட்டுக்கள். விவேக் சரோவின் இசையில் ஒரு பாடல் மற்றும் கேட்கும்படி இருந்தது, பின்னணி இசை படத்திற்கு ஏற்றார் போல் உள்ளது. நிறைய காட்சிகள் எடிட்டிங் கில் தூக்கி உள்ளனர் என்பது படம் பார்க்கும் போது நமக்கு அப்பட்டமாக தெரிகிறது, இதனை சரி செய்து இருந்தால் இன்னும் நல்ல ஒரு படமாக வந்திருக்கும்.


மேலும் படிக்க - Keerthy Suresh : முத்தக்காட்சியில் நடித்த கீர்த்தி சுரேஷ்!? அதுவும் ‘அந்த’ நடிகருடனா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ