‘பண்டிகை’ டிரெய்லர் - சிம்பு வெளியிட்டார்
கிருஷ்ணா, ஆனந்தி, நிதின் சத்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ‘பண்டிகை’. ஃபிரோஷ் இயக்கத்தில், நடிகை விஜயலட்சுமி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லரை நேற்று நடிகர் சிம்பு வெளியிட்டார்.
தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் ஜூலை 7-ம் தேதி ‘பண்டிகை’ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.