ஒரு டைட்டிலுக்கு அக்கப்போரா? மாறி மாறி சண்டையிடும் சிவகார்த்திகேயன் - விஜய் ஆண்டனி!

விஜய் ஆண்டனி நடிக்கும் படத்திற்கும், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கும் பராசக்தி என்று தலைப்பு வைத்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இவரும் சமூக வலைத்தளங்களில் சண்டையிட்டு வருகின்றனர்.
ஒரு படத்திற்கு டைட்டில் வைப்பது மிகவும் கடினமான ஒரு பணி தான். ஒரே வரியில் படத்தின் மொத்த சாராம்சத்தையும் சொல்ல வேண்டும், படத்தின் கதைக்கு ஏற்றார் போலவும் இருக்க வேண்டும். சமீபத்திய நாட்களில் கோலிவுட்டில் டைட்டில் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இதனால் பலரும் பழைய டைட்டில்களை தேடி தேடி வைத்து வருகின்றனர். அந்த வகையில் இன்று இரண்டு படங்களுக்கு ஒரே டைட்டிலை வைத்து அறிவிப்பு வெளியாகி திரைத்துறையினர் மத்தியில் சர்ச்சை வெடித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படத்திற்கும், விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி உள்ள படத்திற்கும் பராசக்தி என்று தலைப்பு வைத்துள்ளனர்.
மேலும் படிக்க | தமன்னாவிற்கு திருமணம்! 38 வயது பிரபல நடிகர் மாப்பிள்ளை..யார் தெரியுமா?
விஜய் ஆண்டனி படம்
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக இருக்கும் அவரது 25வது படத்திற்கு தமிழில் சக்தி திருமகன் என்றும், தெலுங்கில் பராசக்தி என்றும் தலைப்பு வைத்துள்ளனர். அருவி மற்றும் வாழ் போன்ற படங்களை இயக்கிய அருண் பிரபு இந்த படத்தை இயக்கி உள்ளார். விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரன் மற்றும் குழந்தை நடிகர் மாஸ்டர் கேசவ் ஆகிய நடிகர்கள் நடிக்கின்றனர். விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் இந்த படத்தை தயாரிக்கின்றனர். ஃபேமிலி என்டர்டைனராக இப்படம் உருவாவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் படம்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த புறநானூறு படம் கைவிடப்பட்டது. இந்நிலையில் அந்த கதையில் தற்போது சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வருகிறார். அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கும் இந்த படத்திற்கு பராசக்தி என்று தலைப்பு வைத்து அதன் டீசர் இன்று வெளியாகி உள்ளது. பீரியட் வடிவில் உருவாகும் இந்த படம் சிவகார்த்திகேயனின் 25 வது படமாகும்.
இணையத்தில் வெடித்த சண்டை
கடந்த 73 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளியான பராசக்தி படம் இன்று வரையில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்து இருந்தனர். இந்நிலையில் பராசக்தி படத்தின் தலைப்பை சுதாகர்விற்கும், சிவகார்த்திகேயனுக்கும் வழங்குவதாக ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே சமயம் தெலுங்கில் விஜய் ஆண்டனி பராசக்தி படத்தின் தலைப்பை கடந்த ஆண்டு ஜூலை மாதமே பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தை தயாரிக்கும் டவுன் பிக்சர்ஸ் நிறுவனம் நாங்களும் இந்த படத்தின் தலைப்பை முறையாக பதிவு செய்துள்ளோம் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இருவரும் சமூகவலைத்தளங்களில் மாறி மாறி பதிவிட்டு வருவதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் படத்திற்கு தமிழில் சக்தி திருமகன் என்றும், தெலுங்கில் பராசக்தி என்றும் தலைப்பு வைத்துள்ளனர். சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பராசக்தி என்று தலைப்பு வைத்துள்ளனர்.
மேலும் படிக்க | தமன்னாவிற்கு திருமணம்! 38 வயது பிரபல நடிகர் மாப்பிள்ளை..யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ