வெற்றி நடைபோட்டுக்கொண்டு வரும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் 3:25 நிமிட வீடியோ காட்சி அதிகாரபூர்வமாக இணையத்தில் வெளிவந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, யோகிபாபு உட்பட பலர் நடித்திருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்த படத்தை இயக்குனர் பா. ரஞ்சித் தயாரித்துள்ளார். இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. சமூக ஊடகங்களில் இந்த படத்தை குறித்து பாராட்டு வருகின்றனர். ‘பரியேறும் பெருமாள்’ படம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதால், தற்போது அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்டு உள்ளது.


அது மட்டுமில்லாமல், ‘பரியேறும் பெருமாள்’ படத்தை குறித்து பல அரசியல் தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் ஆனா கமல்ஹாசன், இந்த படத்தை பாராட்டி உள்ளார். 


இந்நிலையில் அனைவரிடமிருந்து பாராட்டுக்களை பெற்று வரும் இந்த படத்தின்  3:25 நிமிட வீடியோ காட்சி அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது.