கடந்த 2019-ல் பார்த்திபன் எழுதி, இயக்கிய படம் ''ஒத்த செருப்பு சைஸ்-7''.  இப்படத்தை பார்த்திபன் தனது சொந்த நிறுவனமான பயோஸ்கோப் பிலிம் ப்ரேமர்ஸின் கீழ் தயாரித்துள்ளார்.  ஒரே நபரே திரைப்பத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்ததற்காக இந்த படம் ஆசிய சாதனைகள் புத்தகத்திலும் மற்றும் இந்திய சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்று சிறப்பு பெற்றது.  இத்திரைப்படம் சிங்கப்பூர், தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ரஷ்ய மொழியில் வெளியாகபோகும் கார்த்தியின் “கைதி” !


தமிழ் சினிமா திரையுலகில் இப்படம் வித்தியாசமான முயற்சியில் சிறந்த முன்னோடியாக அமைந்தது.  இப்படம் ட்ரோண்டோ உலகத்தமிழ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றது.  மேலும் 67-வது தேசிய திரைப்பட விருது விழாவில் 2 விருதுகளை இப்படம் வென்று பல பெருமைகளை பெற்றது.  ஏற்கனவே பல விருதுகளை வாங்கி குவித்த இந்த படத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒரு சிறப்பான சம்பவம் நடந்திருக்கிறது.



அதாவது இந்தோனேஷியாவின் மொழியான பஹாசாவில் இப்படம் ரீமேக்காக இருக்கிறது.  உலகிலேயே முதன்முதலாக பஹாசா மொழியில் ரீமேக் செய்யப்படும் தமிழ் படம் இது தான்.  இந்தோனேஷிய மொழியில் இப்படம் ரீமேக் ஆகப்போவதறகான இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது, மேலும் இப்படத்தை PT ஃபால்கன் நவீன் தயாரிக்கிறார்.  மேலும் இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது பார்த்திபன் "இரவின் நிழல்'' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார், இது அவருடைய நீண்டநாள் கனவு படம் என்றும் தெரிவித்துள்ளார்.  இப்படத்தின் சிறப்பு என்னவென்றால் இப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்படுகிறது.  மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | ஏ.ஆர், முருகதாஸ் தயாரிக்கும் புதிய படம்! ஹீரோ யார் தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR