தமிழ் சினிமாவுக்கு அட்வைஸ் கொடுத்த பிரபல தெலுங்கு நடிகர்..! பொங்கியெழுந்த ரசிகர்கள்..!
Pawan Kalyan On Tamil Cinema: பிரபல டோலிவுட் நடிகர் பவன் கல்யாண், சமீபத்தில் ஒரு பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது தமிழ் சினிமாவிற்கு அவர் அட்வைஸ் செய்தார்.
தெலுங்கில் பிரபல நடிகராக விளங்கும் பவன் கல்யாண், தமிழ் சினிமா வளர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அட்வைஸ் செய்துள்ளார். இவரது பேச்சு சினிமா ரசிகர்களுக்கும் தமிழ் சினிமாவை சேர்ந்தவர்களுக்கும் கடும் கோபத்தை வரவழைத்துள்ளது.
பவன் கல்யாண்:
தெலுங்கு திரையுலகையே ஆட்சி செய்து வரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்பத்தை சேர்ந்தவர், பவன் கல்யாண். இவரது அண்ணன் சிரஞ்சீவிலயை ‘மெகா ஸ்டார்’ என்றழைக்கும் ரசிகர்கள் இவரை ‘பவர் ஸ்டார்’ என்று குறிப்பிடுகின்றனர். இவர், நடிப்பில் ‘ப்ரோ’ (Bro) என்ற படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைப்பெற்றது. இதில், பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் உள்ளிட்ட பலர் கலந்து காெண்டனர். இந்த விழாவின் போதுதான் பவன் கல்யாண் தமிழ் சினிமா வளர வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று அட்வைஸ் கொடுத்தார்.
மேலும் படிக்க | விலை உயர்ந்த வைர மோதிரத்திற்கு சொந்தக்காரியான தமன்னா..? யார் கொடுத்த பரிசு இது..?
தமிழ் சினிமாவிற்கு அட்வைஸ்..!
‘ப்ரோ’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பவன் கல்யாண், “சில நாட்களுக்கு முன்னர், தமிழ் சினிமாவில் கடும் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். இன்னொரு பக்கம் தெலுங்கு சினிமா பல துறை சார்ந்த வல்லுநர்களையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதனால், தமிழ் சினிமாவிலும் பல்வேறு மொழி சார்ந்த வல்லுநர்களை அவர்களது திரைத்துறையில் பணியாற்ற ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் RRR போன்ற உலகத்தரம் வாய்ந்த படங்களை தமிழ் சினிமாவும் பான் இந்தியா அளவில் உருவாக்க முடியும்” என்று கூறினார். இவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக மாறி வருகிறது.
கோலிவுட்டில் வினோதமான விதிமுறைகள்:
தமிழ் சினிமாவில் வேலை பார்ப்பவர்களுக்கு என்றிருக்கும் சங்கம், ‘ஃபெஃப்சி’. (The Film Employees Federation of South India) இதில், சில நாட்களுக்கு முன்பு வினோதமான சில விதிமுறைகள் போடப்பட்டன. தமிழ் சினிமாவில் நடிக்க இனி தமிழ் நடிகர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல விதிமுறைகள் போடப்பட்டிருந்தது. தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் இனி தமிழ் நாட்டில்தான் நடைபெற வேண்டும், தேவையன்றி வெளிநாடுகளில் படப்பிடிப்புகளை மேற்கொள்ள கூடாது என்றும் அந்த விதிமுறைகளில் ஹைலைட்டாக இடம் பெற்றிருந்தன. இதற்கு சினிமா ரசிகர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், நடிகர் பவன் கல்யாணும் இதுகுறித்து பேசியுள்ளார்.
ஏன் இந்த விதிமுறைகள்..?
‘ஃபெஃப்சி’யின் இந்த விதிமுறைகள் பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்களை சந்தித்து வரும் நிலையில், இதற்கான காரணமும் விளக்கி கூறப்பட்டுள்ளது. பிற மொழியை சார்ந்தவர்கள் தமிழ் சினிமாவில் தொழில் நுட்ப கலைஞர்கள் வேலை பார்ப்பதால் தமிழ் நாட்டைச்சேர்ந்த தொழில் நுட்ப கலைஞர்களுக்கு வேலை இல்லாமல் போவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில்தான், இதுகுறித்து ‘ஃபெஃப்சி’ அமைப்பு கலந்தாலோசித்து இந்த முடிவிற்கு வந்திருந்தது. மேலும், படம் எடுக்கும் முன்பு படத்தின் பட்ஜெட் குறித்தும் படத்தின் விவரமும் எழுத்து வடிவில் தயாரிப்பாளரிடம் சான்றாக காண்பிக்கப்பட வேண்டும் என்றும் ‘ஃபெஃப்சி’ குறிப்பிட்டுள்ளது.
3வது மனைவியை பிரியும் பவன் கல்யாண்..?
நடிகர் பவன் கல்யாண் ரஷ்ய நாட்டை சேர்ந்த தனது மூன்றாவது மனைவியை பிரிய உள்ளதாக தகவல்கள் வெளியானது. அவரது மனைவி குழந்தைகளுடன் ரஷ்யாவில் இருப்பதாகவும் பவன் கல்யாண் இங்கு அரசியல் மற்றும் சினிமா சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், இது குறித்து பவன் கல்யாண் சில நாட்களுக்கு முன்னர் மறுப்பு தெரிவித்தார். “நாங்கள் இன்னும் கணவன் மனைவிதான்..ஒன்றாகத்தான் இருக்கிறோம்..” என அவர் கூறியிருந்தார்.
மேலும் படிக்க | ‘மாவீரன்’ திருட்டுக்கதையா..? இயக்குநர் மீது பாயும் சர்ச்சை…!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ