‘மாவீரன்’ திருட்டுக்கதையா..? இயக்குநர் மீது பாயும் சர்ச்சை…!

Maaveeran Movie Inspiration: ‘மண்டேலா’ படத்தை இயக்கி தனித்துவமான தமிழ் சினிமா இயக்குநர்களின் பட்டியலில் இடம் பெற்ற மடோன் அஷ்வின், சமீபத்தில் சிவகார்த்திகேயனை வைத்து ‘மாவீரன்’ படத்தை இயக்கியிருந்தார்.   

Written by - Yuvashree | Last Updated : Jul 26, 2023, 02:55 PM IST
  • மடோன் அஷ்வின் இயக்கத்தில் வெளியாகியிருந்த படம், மாவீரன்.
  • படம் 75 கோடிக்கும் மேல் கலெக்ட் செய்துள்ளது.
  • இந்த படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
‘மாவீரன்’ திருட்டுக்கதையா..? இயக்குநர் மீது பாயும் சர்ச்சை…! title=

‘மாவீரன்’ பட இயக்குநர் மடோன் அஷ்வின், யோகி பாபுவை வைத்து ‘மண்டேலா’ என்ற தனது முதல் படத்தை இயக்கியிருந்தார். இந்த கதையும், மாவீரன் பட கதையும் ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவல் என சமூக வலைதளத்தில் கருத்து ஒன்று பரவி வருகிறது. 

மாவீரன் திரைப்படம்:

மாவீரன்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருந்தார். சரிதா, மோனிஷா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் வில்லனாக இப்படத்தில் வந்தார். படம், கடந்த 14ஆம் தேதி வெளியானது. தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வசூல் மழையிலும் நனைந்து வருகிறது, மாவீரன் திரைப்படம். 

மேலும் படிக்க | ஜூலை 28ஆம் தேதி ஜெயிலர் இசை வெளியீட்டு விழா

மண்டேலா திரைப்படம்:

யோகி பாபுவின் நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான படம், ‘மண்டேலா’. இந்த படத்தில், ஷீலா ரவி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். பிரபல நடிகர் சங்கிலி முருகன், ஷண்முகம் ஆகியோரும் இதில் முக்கிய வேடங்களில் வந்திருந்தனர். குறைவான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்த இந்த படம், திரையரங்கில் வெளியிடப்படவில்லை. மாறாக, தொலைக்காட்சியில் நேரடியாக வெளியிடப்பட்டது. அரசியல் சார்ந்த காமெடி கதையாக இருந்ததால், மண்டேலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரபேற்பினை பெற்றது. இதையடுத்து, படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த திரைக்கதை, சிறந்த வசனம் என பல விருதுகளையும் இப்படம் பெற்றது. 

இந்த ஹாலிவுட் படங்களில் காப்பியா..? 

ஹாலிவுட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான படம், ஸ்விங் வோட் (SWing Vote) இந்த படத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் கெவின் காஸ்ட்னர் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில், ஹீரோவின் ஒரு ஓட்டு வாக்கினை வைத்துதான் யார் அமெரிக்க ஜனாதிபதி என்ற முடிவுக்கு வரமுடியும் என்பது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். இதே போல மண்டேலா படத்திலும் பஞ்சாயத்து தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்பதும் மண்டேலாவின் ஒரு ஓட்டை வைத்தே நிர்ணயிக்கப்பட இருக்கும்.  எனவே, இப்படம் ஹாலிவுட்டின் ஸ்விங் வோட் படத்தின் காப்பி என பிரபல விமர்சகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

‘மாவீரன்’ படத்தில், ஹீரோவான சிவகார்த்திகேயனுக்கு மட்டும் மாயக்குரல் ஒன்று கேட்கும். இதே போல ஹாலிவுட்டிலும் Stranger Than Fiction என்ற ஒரு படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திலும் ஹீரோவின் கதாப்பாத்திரத்திற்கு மாயக்குரல் ஒன்று கேட்கும். இதனால் அவன் தலையெழுத்தே மாறிவிடும். மண்டேலா படத்தை போல மாவீரன் படமும் இப்படி வித்தியாசமான கதைக்களம் கொண்ட ஹாலிவுட் படங்களில் தழுவலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

மாவீரன் படத்தில் வரும் அடுக்குமாடி குடியிருப்பு..

‘மாவீரன்’ படத்தில், தரமற்ற அடுக்கமாடி குடியிருப்பு வீடு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது போலவும் அதில் வசிக்கும் மக்களின் நிலை இறுதியில் கேள்விக்குறியாவது போலவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். சென்னையில் பிரபல குடியிருப்பு ஒன்று இதே போல உள்ளதாகவும் அதன் கதையைத்தான் கொஞ்சம் மசாலா தூவி மடோன் அஷ்வின் எடுத்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது உண்மை கதைதானா என்பதற்காே அல்லது ஹாலிவுட் படத்தின் தழுவலா என்பதற்கோ படக்குழு தரப்பில் இருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. 

மேலும் படிக்க | நோலன் ரசிகர்களால் இந்தியாவிலும் கோடிகளை குவிக்கும் Oppenheimer... முதல் நாள் வசூல் இவ்வளவா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News