புதுடில்லி: பாலிவுட் நடிகை பாயல் கோஷ் (Payal Ghosh), பாலிவுட் திரைப்பட இயக்குனர் அனுராக் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக குற்றம் சாட்டியதிலிருந்து, இந்த விஷயம் சமூக ஊடகங்களில் புயலாகப் பரவி வருகிறது. பாயல், அனுராக் கஷ்யப்பை (Anurag Kashyap) ட்விட்டரில் tag செய்து, 'அனுராக் கஷ்யப் என்னை கட்டாயப்படுத்தினார். நரேந்திர மோடி ஜி, நீங்கள் அனுராக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அவரது உண்மை என்ன என்பது நாட்டுக்குத் தெரியும். இதை சொல்வது எனக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் எனது பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது என்றும் எனக்குத் தெரியும். தயவுசெய்து உதவுங்கள்.' என்று எழுதியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனைத்தையும் வெளிப்படையாகச் சொன்னார் பாயல்


இப்போது பாயல் கோஷ் (Payal Ghosh) இந்த விஷயத்தில் முழு விவரத்தையும் வெளிப்படையாகக் கூறியுள்ளார். பாயல், 'நான் அவரை அதற்கு முன் அறிந்திருக்கவில்லை, நாங்கள் முன்பு சந்திக்கவில்லை. அனுராக் கஷ்யப்பை (Anurag Kashyap) நடந்து கொண்டது எனக்கு அசௌகரியத்தை உருவாக்கியது. எது நடந்ததோ அது நடந்திருக்கக் கூடாது. யாராவது உங்களிடம் வேலைக்காக வந்தால், அவர் எதற்கும் தயாராக இருக்கிறார் என்று அர்த்தமல்ல. இந்த விஷயம் இன்றும் என்னைத் தொந்தரவு செய்கிறது. ஆனால் இப்போது நான் இதை வெளிப்படுத்தியவுடன் ​​நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்’ என்று கூறினார்.


2014 ஆம் ஆண்டின் முடிவு, 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த விஷயம் நடந்தது


‘2014 ஆம் ஆண்டின் இறுதியில் மற்றும் 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த விஷயம் நடந்தது. அவருக்கு அப்போது கல்கியிடமிருந்து விவாகரத்து கூட கிடைக்கவில்லை. நான் இதைப் பற்றி சொல்ல முன்பே முயற்சித்தேன். ஆனால் என் குடும்பத்தினரும் நண்பர்களும் எந்த சர்ச்சையிலும் சிக்கிக்கொள்ள வேண்டாம் என இதற்கு மறுத்துவிட்டார்கள். ஆனால் மற்ற பெண்கள் இப்படிப்பட்ட விஷயங்களில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக நான் இதைச் சொல்கிறேன்.’ என்று கூறியுள்ளார் பாயல் கோஷ் (Payal Ghosh).


ALSO READ: கட்டாயப்படுத்தி தவறாக நடக்க முயன்றேனா?... அனுராக் வெளியிட்ட ட்வீட்!!


பாயல் இதைப்பற்றி 6 ஆண்டுகளாக வெளிப்படுத்த விரும்பியுள்ளார்.


பாயல் இதைப்பற்றி மேலும் கூறுகையில், 'நான் பல முறை ட்வீட் செய்தேன், பல முறை டெலீட் செய்தேன். ட்வீட்டை நீக்குமாறு கூறி என் மேலாளர் எனது சகோதரருக்கு ஃபோன் செய்தார். இவர்கள் அனைவரும் எனது நலம் விரும்பிகள் என்றார் அவர். எனது குடும்பம் பழமைவாத குடும்பம். அவர்களும் என்னை ஆதரிக்க மாட்டார்கள். இதையெல்லாம் விடு என்றுதான் அவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்… வீட்டிற்கு வா என்கிறார்கள். அனுராக் என்னிடம் மன்னிப்பு கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அவர் இதை மறுத்தார். இதையெல்லாம் பேச எனக்கு 6 ஆண்டுகள் ஆயின. அனைவராலும் தைரியமாக கூற முடிவதில்லை. பாலிவுட்டில் (Bollywood) எல்லோரும் மோசமானவர்கள் அல்ல. அனைவரும் போதை மருந்துகளை எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் இதை எடுத்துக்கொள்பவர்கள் இதை நியாயப்படுத்த முடியாது.” என்றார்.


பாயலுக்கு ஆதரவாக வந்துள்ளது தேசிய பெண்கள் ஆணையம்


தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) தலைவர் ரேகா சர்மா கூறுகையில், 'நேற்று இரவு, பாயல் கோஷ் (Payal Ghosh) ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் 2015 இல் அனுராக் கஷ்யப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுதியுள்ளார். அவர் புகார் அளிக்க விரும்பினால், தேசிய பெண்கள் ஆணையம் அவருக்கு ஆதரவாக இருக்கும் என நான் அவருக்கு பதிலளித்துள்ளேன்.’ என்று கூறியுள்ளார்.


ALSO READ: என்னுடைய எதிரிகளின் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்க எமன் உயிர்பிச்சை கொடுத்தார்- Anurag Kashyap


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR