பாத் டப்பில் ஆண்ட்ரியா: வெளியானது Pisasu 2 படத்தின் பர்ஸ்ட் லுக்
இந்த படத்தில் விஜய் சேதுபதி பேய் ஓட்டுபவர் ரோலில் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின
தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் நடிகர் ஆண்ட்ரியா. பலவிதமான திறமைகளைக்கொண்ட இவர் நடிப்பிலும் கலக்கி வருகிறார். மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஆண்ட்ரியா ஜெரேமியா (Andrea Jeremiah) மிஷ்கினின் ‘பிசாசு 2’ (Pisassu 2) படத்தில் நடித்து வருகிறார். மிஷ்கின் (Mysskin) இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான பிசாசு படம் பெரிய வெற்றி பெற்றதையடுத்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
ALSO READ | Pisasu 2: நிர்வாணமாக நடிக்கும் பிரபல தமிழ் நடிகை
ஆண்ட்ரியாவை பிரதானமாக கொண்டு இந்த படத்தின் திரைகதை அமைக்கப்பட்டுள்ளது. பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி மக்களிடைய இந்த படத்தின் மீதான பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் தனது இணையத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என்றும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர் படக்குழுவினர்.
அண்மையில் பிசாசு 2 படத்தில் நமீதா கிருஷ்ணமூர்த்தி இணைந்துள்ளதாகவும், மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி பேய் ஓட்டுபவர் ரோலில் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின எனபது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | பிசாசு 2 படத்தின் first look-க்கும் Andrea-வுக்கும் இப்படி ஒரு connection இருக்கா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR