பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறை விவரிக்கும் திரைப்படம் வரும் ஏப்ரல் 5-ஆம் நாள் வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை இந்திய சினிமாவில் சமீபகாலமாக புகழ்பெற்ற பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை விவரிக்கும் வர்த்தகரீதியான திரைப்படம் 23 மொழிகளில் தயாராகியுள்ளது. 


இத்திரைப்படத்தில் பிரதமர் மோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். பிஎம் நரேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 5-ஆம் நாள் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.



போமன் இரானி, பர்கா பிஷ்ட், மனோஜ் ஜோஷி, ஜரினா வஹாப், பிரஷாந்த் நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியாகும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்த படத்தில் விவேக் ஓப்ராய் மோடி வேடத்தில் தோன்றும் 9 வித ’கெட்டப்’ கொண்ட போஸ்ட்டர்களும் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இது சமூகவலைத்தளங்களில் பரவி நல்ல வரவேற்பையும் பெற்றது. பின்னர் இரண்டாவது போஸ்ட்டர் 8-3-2019 அன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.


ஆனால், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவினால் இரண்டாவது போஸ்ட்டர் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.


முதல் போஸ்ட்டருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இந்தப் படத்தை முன்கூட்டியே வெளியிட தயாரிப்பாளர்கள் தீர்மானித்துள்ளனர். நாட்டில் உள்ள சுமார் 130 கோடி மக்களை இனிமேலும் காக்கவைக்க கூடாது என்பதால் இந்த திரைப்படத்தை முன்கூட்டியே ஏப்ரல் 5-ம் தேதி வெளியிடுகிறோம்  என இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சந்திப் எஸ் சிங் தெரிவித்துள்ளார்.