பொன்னியின் செல்வனின் வேகமான சாதனை - ஒரு வாரத்தில் இவ்வளவு வசூலா?
பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது.
தொடர் விடுமுறை தினங்களால், பொன்னியின் செல்வன் திரையிடப்பட்ட திரையரங்குகளில் பலர் குடும்பத்துடன் சென்று திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். நாவலின் கருவை கலைக்காமல் மணிரத்னம் படமாக்கியிருப்பதாகவும், காட்சியமைப்புகளிலும் சரி, லொகேஷன் தேர்வுகளிலும் சரி இயக்குநர் மணிரத்னம் கலக்கியிருக்கிறார் எனவும் பலர் கூறிவருகின்றனர். குறிப்பாக, பொன்னியின் செல்வன் படம் இந்தியாவுக்கு கோலிவுட்டிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும் சிறந்த படைப்பு எனவும் கொண்டாடிவருகின்றனர்.
மேலும் படிக்க | பொன்னியின் செல்வன்தான் பாகுபலியைவிட பெஸ்ட்... அடுக்கடுக்கான காரணங்கள்
அதே சமயம், பொன்னியின் செல்வன் படத்தை படித்தவர்களில் சிலருக்கு படம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இரண்டு பாகங்களில் பொன்னியின் செல்வனை சொல்லிவிட முடியாதுதான் என்றாலும் மணிரத்னம் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் எனவும் கருத்து தெரிவித்துவருகின்றனர். ஆகமொத்தம் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இருப்பினும் பொன்னியின் செல்வன் 70 ஆண்டுகளாக செய்யப்பட்ட முயற்சி என்பதால் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், படம் வெளியாகி இன்றுடன் ஏழு நாள்கள் ஆகிறது. கடந்த ஆறு நாள்கலில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலில் பெரும் சாதனைகளை மேற்கொண்டுள்ளது. முதல் நாளில் உலகம் முழுவதும் மொத்தம் 81 கோடி ரூபாய் வசூலை குவித்தது. மேலும், படம் வெளியான முதல் மூன்று நாள்களிலேயே 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஆறு நாள்களில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் ரூ.100 கோடியை தாண்டி வசூல் புரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடம் வெளியான தமிழ் திரைப்படங்களில் அஜித் நடித்த 'வலிமை', விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்தை அடுத்த பொன்னியின் செல்வன் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேகமாக 100 கோடி ரூபாயை வசூலித்த திரைப்படம் என்றும் பொன்னியின் செல்வனின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரோடக்ஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தால், இந்த வாரம் வெளியாக இருந்த பல திரைப்படங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, பொன்னியின் செல்வனின் வசூல் சாதனைகளுக்கான சாட்சிகள் எனலாம்.
மேலும் படிக்க | ஆக்கிரமித்த பொன்னியின் செல்வன் - திணறும் தமிழ் படங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ