ஓடிடியில் வெளியானது பொன்னியின் செல்வன்... ஆனால் ஒரு ட்விஸ்ட்
பொன்னியின் செல்வன் படமானது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் படமாகியுள்ளது. எம்ஜிஆர், கமல் ஹாசன் உள்ளிட்டோரால் சாத்தியப்படாத விஷயத்தை மணிரத்னம் சாத்தியமாகியிருக்கிறார். 70 ஆண்டுகளாக தமிழர்களின் மனக்கண்ணில் விரிந்த கதாபாத்திரங்கள் தற்போது திரையில் அனைவருடைய கண்களின் முன் உலாவ ஆரம்பித்திருக்கின்றன. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி,ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது.
நாவலின் கருவை சிதைக்காமல் மணிரத்னம் படமாக்கியிருப்பதாகவும், கோலிவுட்டிலிருந்து இந்தியாவுக்கு ஒரு பெருமைமிகு சினிமா கிடைத்திருப்பதாகவும் ரசிகர்கள் சிலாகித்துவருகின்றனர். அதேசமயம் புத்தகம் படிக்காதவர்களுக்கு படம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. கதாபாத்திரங்கள் குறித்து ரசிகர்களுக்கு பெரிதாக புரியவில்லை. அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் எனவும் ஒருதரப்பினர் கூறுகின்றனர்.
படத்துக்கு இப்படி ஒருசேர பாசிட்டிவ், நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் சக்கைப்போடு போட்டது பொன்னியின் செல்வன் பாகம் 1. படத்தின் முதல் பாகமானது இதுவரை உலகம் முழுவதும் 450 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் வசூல் வேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் படமானது ஏப்ரலில் வெளியாகும் என தெரிகிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்துவருகின்றன.
இதற்கிடையே பொன்னியின் செல்வன் எப்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என பலர் காத்திருந்தனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. ஆனால் வாடகை செலுத்தி பார்க்கும் முறையில்தான் தற்போது இப்படம் வெளியாகியிருக்கிறது. வழக்கமாக படம் ஓடிடியில் வெளியாகும்போது அதன் சந்தாதாரராக இருக்கும்பட்சத்தில் எந்த தொகையும் செலுத்தி படத்தை பார்க்க வேண்டியதில்லை.
ஆனால், தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தை பார்க்க பார்வையாளர்கள் ரூ.199 கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை செலுத்திய தேதியிலிருந்து 30 நாட்கள்வரை மட்டுமே உங்களால் படத்தை பார்க்க முடியும். அதேசமயம் நவம்பர் 4ஆம் தேதி முதல் பொன்னியின் செல்வன் வழக்கமான முறையில் ஓடிடியில் வெளியாகுமென்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | என்னது நித்யா மேனன் - பார்வதி கர்ப்பமா? வைரலாகும் பதிவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ