என்னது நித்யா மேனன் - பார்வதி கர்ப்பமா? வைரலாகும் பதிவு

நடிகைகள் பார்வதி மற்றும் நித்யா மேனன் தங்களது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்ட புகைப்படம் ஒன்றால் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 29, 2022, 12:11 PM IST
  • நித்யா மேனன் கர்ப்பம்
  • வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு
என்னது நித்யா மேனன் - பார்வதி கர்ப்பமா? வைரலாகும் பதிவு title=

சயனோரா, பார்வதி திருவோத், நித்யா மேனன் ஆகியோரின் சமூக வலைதள பதிவுகள் சில நாட்களாக சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இவர்கள் மூவரும் தங்களது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள உலகில் மட்டுமல்லாது தமிழிலும் பிரபலமான நடிகைகள் பார்வதி திருவோத் மற்றும் நித்யா மேனன். இதில் பார்வதி திருவோத் 2008 ஆம் ஆண்டு வெளியான பூ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், மற்றும் மரியான் திரைப்படத்திலும் நடித்துள்ளார். திரைப்படத்திற்காக தமிழின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுள்ளார். அத்தோடு விஜய் டிவியின் புதுமுக நடிகைக்கான விருதையும் இவர் பெற்றுள்ளார். மறுபுறம் நடிகை நித்யா மேனன் 2011 ஆம் ஆண்டு வெளியான நூற்றெண்பது என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். சமீபத்தில் இவர் தனுஷூடன் நடித்து வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டில் அத்துமீறி கையை வைத்த அஸீம்; தனலட்சுமியின் அதிர்ச்சி புகார்

இந்த நிலையில் தற்போது சில நிமிடங்களுக்கு முன்னர் நித்யா மேனன் மற்றும் பார்வதி திருவோத் இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கருத்தரிப்பு சோதனை செய்யும் கருவியுடன், குழந்தைக்கான நிப்பிள் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டார். இந்த பதிவு தற்போது இணைய தளத்தில் வெகுவாக வைரலாகி வருவதுடன் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அத்துடன் அவர் அதில் ‘உறுதியாகி விட்டது... அதிசியம் தொடங்குகிறது’ என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதனைப்பார்த்த ரசிகர்கள், இவர்கள் கர்ப்பமாகியுள்ளதாக நினைத்து, தற்போது வாழ்த்து மழையை பொழித்து வருகின்றனர். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இதைத்தொடர்ந்து அந்த வரிசையில், மலையாளம் மற்றும் தமிழில் பின்னணி பாடகியாக வலம் வரும் சயனோரா பிலிப்பும் அதே பதிவை வெளியிட்டார். இதனால், இந்த பதிவு புதிய படத்திற்கான பிரோமோஷன் என்றும் இன்னும் சிலர், இது ஏதாவது பிரசாரத்தை முன்னெடுப்பதற்கான பதிவு என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | விக்ரம் 100-வது நாள் கொண்டாட்டம்: அதிரடி ஏற்பாடுகளுடன் தயாராகும் கமல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News