‘சோழா சோழா’ - பொன்னியின் செல்வனின் புதிய அப்டேட்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் சோழா சோழா என்ற பாடல் நாளை மறுநாள் வெளியாகவிருக்கிறது.
மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது. இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது. பொன்னியின் செல்வனில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி,பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்திற்கான பின்னணி இசை மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
பொன்னியின் செல்வனின் டீசரை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் படம் மாபெரும் வெற்றி பெறும் என கூறிவருகின்றனர். அதேசமயம், படத்தின் கதாபாத்திர பெயர்கள் மீதும், லுக்குகள் மீதும் சிலர் அதிருப்தியையும் தெரிவித்துவருகின்றனர். இருந்தாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலருக்கும் அதிகரித்துள்ளது.
இந்தச் சூழலில், படத்தில் இடம்பெற்றிருக்கும் பொன்னி நதி என்ற பாடலை தனியார் மால் ஒன்றில் பிரமாண்டமாக வெளியிட்டனர். இதில், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் கலந்துகொண்டனர். பாடலானது அந்த மாலில் வைக்கப்பட்டிருந்த ஸ்க்ரீனில் ரசிகர்கள் முன்னிலையில் ஒளிபரப்பப்பட்டது. இந்தப் பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருந்த அந்தப் பாடலை ஏ.ஆர். ரஹ்மான் பாடியிருந்தார். இந்நிலையில் படம் இடம்பெற்றிருக்கும், “சோழா சோழா” என்ற பாடல் நாளை மறுநாள் வெளியாகிறது.
இந்தப் பாடலையும் இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருக்க, சத்யபிரகாஷ், வி.எம். மகாலிங்கம், நகுலப்யாங்கார் ஆகியோர் பாடியுள்ளனர். தற்போது இதுதொடர்பான அறிவிப்பு போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க | ராஜமௌலியின் உதவியாளர் அஷ்வின் கங்கராஜு இயக்கத்தில் தயாராகும் '1770'
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ