த்ரிஷாவிற்கு திருமணம்! எப்போது தெரியுமா?
எனக்கு விவாகரத்தில் நம்பிக்கை இல்லை, என் திருமணம் விவகாரத்தில் முடிய நான் விரும்பவில்லை என்று நடிகை த்ரிஷா தனது திருமண எதிர்பார்ப்பு குறித்து பேசியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா, இன்றுவரை தனது திகட்டாத அழகாலும் இளமையாலும் ரசிகர்களை தன்வசம் வைத்து முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். சமீப காலமாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் நடிப்பதில் த்ரிஷா ஆர்வம் காட்டி வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் பல நட்சத்திர பட்டாளங்களுடன் த்ரிஷா நடித்திருந்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் த்ரிஷா சோழ தேசத்து இளவரசி குந்தவை பிராட்டியாக நடித்து ரசிகர்களின் பலரின் நெஞ்சங்களிலும் குடிகொண்டு இருக்கிறார்.
மேலும் படிக்க | ஜூன் 9 கல்யாணம்.. அக். 9 குழந்தைகள்..! நயன் - விக்கி திடீர் பெற்றோர் ஆனது எப்படி?
இவ்வளவு ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த நடிகைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, முன்னர் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து பின்னர் சில காரணங்களால் திருமணம் நின்றுவிட்டது. அதன்பின்னர் த்ரிஷா யாரையும் திருமணம் செய்துகொள்ள முன்வரவில்லை, சில வருடங்களுக்கு முன்னர் த்ரிஷா, நடிகர் ராணாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. தற்போது நடிகை த்ரிஷா சமீத்தில் அளித்த பேட்டியொன்றில் தனது திருமணம் பற்றி கூறியிருக்கிறார். அவர் கூறுகையில், ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பலரும் என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள், சிலர் கேட்கும் விதம் எனக்கு பிடிக்கவில்லை. நீ எப்போது திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாய் என்று சாதாரணமாக என்னிடம் கேட்டால் நான் பதில் சொல்லுவேன் என்று கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், திருமணம் பற்றி எனக்கு தெரியாது அது நான் யாருடன் இருக்கிறேன், யாரைச் சந்திக்கிறேன் என்பதைப் பொறுத்தது, ஒருவரை பார்த்தால் நான் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழக்கூடிய நபர் இவர் தான் என்று நான் உணர வேண்டும். எனக்கு விவாகரத்தில் நம்பிக்கை இல்லை, என் திருமணம் விவகாரத்தில் முடிய நான் விரும்பவில்லை. என்னைச் சுற்றியுள்ள நிறைய திருமணமான தம்பதிகள் தங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன், அதில் சிலர் எனது நண்பர்கள். அவர்கள் மகிழ்ச்சியில்லாமல் இருப்பதற்கு காரணம் தவறான தேர்வு, அப்படிப்பட்ட திருமணத்தில் நான் இருக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க | 'ஆயிரத்தில் ஒருவன்' படம் பற்றி அதிர்ச்சியான உண்மையை வெளியிட்ட செல்வராகவன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ