ஜூன் 9 கல்யாணம்.. அக். 9 குழந்தைகள்..! நயன் - விக்கி திடீர் பெற்றோர் ஆனது எப்படி?

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவருக்கும் இரட்டை குழந்தை பிறந்துள்ளாதாக விக்னேஷ் சிவன் தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

Written by - Bhuvaneshwari P S | Edited by - RK Spark | Last Updated : Oct 10, 2022, 08:55 AM IST
  • கடந்த ஜூன் 9ம் தேதி நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது.
  • மிகவும் பிரமாண்டமாக இந்த திருமணம் நடைபெற்றது.
  • தற்போது வாடகை தாய் மூலம் இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது.
ஜூன் 9 கல்யாணம்.. அக். 9 குழந்தைகள்..! நயன் - விக்கி திடீர் பெற்றோர் ஆனது எப்படி?

நயன்தாரா விக்னேஷ் சிவன் தற்போது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாய் தந்தையாகி இருப்பது தான் சோசியல் மீடியாக்களில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.  திருமணமான 4 மாதத்தில் எப்படி நயன்தாராவால் இரட்டை குழந்தைக்கு தாயாக முடியும் என்ற கேள்வியை பலரும் முன்வைத்து வருகின்றனர்.  அதோடு நயன்தாரா கர்ப்பிணி வயிறு உடன் இதுவரை எந்த புகைப்படத்தையும் வெளியிடவில்லையே என்ற கேள்வியும் உலா வருகின்றது.  நயன்தாரா -  விக்னேஷ் சிவன் ஜோடி நானும் ரவுடிதான் படத்தில் இணைந்து பணியாற்றிய போது காதலில் விழுந்தனர்.  அதன் பிறகு இருவரும் ஒன்றாக லிவிங் டுகெதர் தான் 5 ஆண்டுகளாக வசித்து வந்தனர்.  பல சறுக்கல்களுக்கு நடுவே லேடி சூப்பர் ஸ்டார் என உயர்ந்து நிற்கும் நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டார். 

இவர்களது திருமணத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது.  அதன் ஒளிபரப்பை விரைவில் வெளியிட உள்ளதாகவும் சமீபத்தில் டீஸர் ஒன்றை வெளியிட்டிருந்தது.  இதுபோன்ற சூழலில்தான் விக்னேஷ் சிவன் நேற்று தனது சமூக வலைதளப் பக்கங்களில் தானும் நயன்தாராவும் அழகிய இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனதாக மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்திருந்தார்.  இதைப் பார்த்த பலரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். ஆனால் உண்மையில் அவர்கள் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுள்ளனர்.  சினிமா தம்பதிகள் இப்படி வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வது இது ஒன்றும் முதல் முறை அல்ல.  பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மூன்றாவது மகன் கூட வாடகை தாய் மூலம் தான் பிறந்தார். 

மேலும் படிக்க | நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள் - விக்னேஷ் சிவன் போட்ட பதிவு... திணறும் சோஷியல் மீடியா

அதேபோல நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ஷில்பா ஷெட்டி கூட சமீபத்தில் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டனர். தற்போது மீண்டும் பலருக்கும் எழும் கேள்வி நயன்தாரா எதற்காக திருமணத்திற்கு முன்பே வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றெடுக்க முடிவெடுத்தார் என்பதே.  அதற்கு பதில் நயன்தாராவிடம் தான் உள்ளது.  அது அவரது சொந்த விஷயம் என்பதால் அது குறித்த எந்த ஒரு  கருத்தையும் நம்மால் தெரிவிக்கவோ, பேசவோ முடியாது. தற்போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான மகிழ்ச்சியில் நயன்தாரா கொஞ்ச காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்க திட்டமிட்டுள்ளாராம். அதாவது குழந்தைகளுக்கு மூன்று முதல் ஆறு மாத காலம் ஆகும் வரை தாயின் அரவணைப்பு முக்கியம் என்பதால் அந்த காலகட்டத்தில் குழந்தையை கவனிப்பதில் மட்டுமே முழு கவனத்தை செலுத்த உள்ளாராம். 

 

இதனால் எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாத நயன்தாரா கைவசம் இருக்கும் படங்களை மட்டும் முடித்து வைத்துவிட்டு தற்போது குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி உள்ளாராம். அதோடு நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தை பிறந்ததில் இன்னொரு சர்ச்சையும் எழுந்துள்ளது. அது என்னவென்றால் நயன்தாராவின் முதல் எழுத்தான நயன் அவருக்கு மிகவும் லக்கியான நம்பர் என்பதால் அவர்கள் திருமணம் கூட ஜூன் 9ஆம் தேதி தான் நடைபெற்றது. அதேபோல அவர்களுக்கு அக்டோபர் 9 ஆம் தேதியான நேற்று இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இதனால் பலரும் வேண்டுமென்றே  ஒன்பதாம் தேதி குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக ஆபரேஷன் செய்து கொள்ள வாடகைத்தாய் நிர்பந்திக்கப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எது எப்படியோ கட்டாயம் முறைப்படி சட்ட அனுமதி பெற்று நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு எடுத்திருக்கலாம்.  புதிய பெற்றோர்களான நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்கள்.

மேலும் படிக்க | 100 கோடி வசூல் செய்த நயன்தாராவின் லேட்டஸ்ட் திரைப்படம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News