மறைந்த பாப் இசை கலைஞர் அவிச்சி இறுதியாக இசையமைத்த பாடல்களின் தொகுப்பு வரும் ஏப்ரல் 10-ஆம் நாள் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுவீடன் நாட்டைச் சேர்ந்த 28-வயது பாப் இசை, நடனக் கலைஞர் அவிச்சி கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ஓமானின் மஸ்கட்-ல் மரணம் அடைந்தார். அவரது இறப்பிற்கு ஒரு ஆண்டு பின்னர் தற்போது இறுதி படைப்பு வெளியிட அவரது குடும்பத்தார் முன்வந்துள்ளனர்.


TIM என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் தொகுப்பு 16 இசை பாடல்களை கொண்டது எனவும், இதன் மூலம் கிடைக்கு வருமானத்தை Tim Bergling Foundation-க்கு அளிக்க அவரது குடும்பம் முன்வந்துள்ளது எனவும் தெரிகிறது.



அவிச்சி என அழைக்கப்படும் டிம் பெர்லிங் கடந்தாண்டு ஏப்ரல் மாதல் தற்கொலை செய்து மறனித்தார். அவரது இறப்பு செய்தியை கேட்டு உலகளவில் உள்ள அவரது ரசிகர்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாகினர்.


உலகின் சிறந்த DJ கலைஞர்களில் ஒருவராக கருதப்படும் அவிச்சியின் படைப்புகளில்... Wake Me Up, Levels, Lonely Together போன்றவை  குறிபிட்டத்தக்கவை ஆகும்.


முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு அவிச்சி, தான் உலகச் சுற்றுலா மேற்கொள்வதிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். அவரது உடலநலக் கோளாறு அதற்குக் காரணமாக இருக்கலாம் என கருதப்பட்டது. பின்னர் திடீரென அவரது இறப்பு செய்தி வெளியாகி உலக ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆரம்பத்தில் அவரது இறப்பு குறித்து மர்மங்கள் நிலவி வந்த நிலையில் இறுதியில் அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.