பரவை முனியம்மா தமிழ்த் திரைப்பட, நாட்டுப்புறப் பாடகி, மற்றும் நடிகையாவார். மதுரை மாவட்டத்திலுள்ள பரவை எனும் ஊரைச் சேர்ந்தவர் என்பதால் பரவை முனியம்மா என்று அழைக்கப் பெற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்த் திரைப்படங்களில் தூள் எனும் படத்தில் திரைப்படப் பாடகராகவும், நடிகராகவும் அறிமுகமானார். காதல் சடுகுடு, பூ, தேவதையைக் கண்டேன் என இருபத்தைந்து திரைப்படங்களுக்கும் மேல் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் கிராமத்துச் சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.


பரவை முனியம்மாவின் ஏழ்மை மற்றும் இயலாமையையும் கருத்தில் கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, 6 லட்சம் ரூபாய் நிதியுதவியும், குடும்ப செலவுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாயும் மற்றும் மாதாந்திர மருத்துவச் செலவினை டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து வழங்கினார்.


இந்நிலையில் தமிழக அரசின் ‘கலைமாமணி‘ விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற இவர் சிறுநீரக கோளாறு உள்ளிட்ட சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். பரவை முனியாம்மா இன்று அதிகாலை 2.30 மணிக்கு காலமானார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.