Fall Guys கேம் மிகவும் பிரபலமான விளையாட்டு. ஆனால் பிரபலமான அளவு அதன் விற்பனை ஆகவில்லை. அதுமட்டுமல்லாமல் அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே, பிரபலமான Fall Guys கேமை இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வந்தவுடன் சாதனை அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டது. இலவச பதிவிறக்க அறிவிப்புக்கு பிறகு, இந்த கேம் 48 மணி நேரத்தில் 20 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டது. 


கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய சமயத்தில் அதாவது, கோவிட் நோய் ஏற்பட்ட முதல் அலையின் போது பல விளையாட்டுகள் பிரபலமடைந்தன, அவற்றில் ஒன்று ஃபால் கைஸ்.


மேலும் படிக்க | ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களை இலக்கு வைக்கும் ஹெர்மிட் ஸ்பைவேர்


யூடியூப் மற்றும் ட்விச்சில் கேமை ஸ்ட்ரீம் செய்த படைப்பாளிகள் அதை அதிகம் விளையாடினர். இந்த பொழுதுபோக்கு விளையாட்டு 2020 இல் கட்டண விளையாட்டாகத் தொடங்கப்பட்டது, ஆனால் இப்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கேம், இலவசமாக்கப்பட்டுள்ளது.  



PlayStation, Xbox, Nintendo Switch ஆகியவற்றில் கிடைக்கும் ஃபால் கைஸ் கேம், ஜூன் 21 முதல் அனைத்து தளங்களிலும் இலவசம் என்று அறிவிப்பு வெளியானது.  


Fall Guys விளையாட்டை இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியான 48 மணி நேரத்திற்குள் 20 மில்லியன் பேர் கேமை பதிவிறக்கம் செய்துள்ளனர். 


மேலும் படிக்க | ரூ.26 ஆயிரத்துக்கு ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள டிவி


ஃபால் கைஸ் விளையாட்டை எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்


எப்படி பதிவிறக்கம் செய்வது
ப்ளேஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ் மற்றும் நிண்டெண்டோ ஸ்விட்ச் போன்ற கன்சோல்களில், ஃபால் கைஸ் இப்போது இலவசமாகக் கிடைக்கிறது. கணினியில் கேமை விளையாடுபவர்கள், எபிக் கேம்ஸ் ஸ்டோரில் இருந்து ஃபால் கைஸை பதிவிறக்கம் செய்யலாம்.


இதற்கு முதலில் எபிக் கணக்கை உருவாக்க வேண்டும். அதுவும் இலவசம். இந்தக் கணக்கின் உதவியுடன், விளையாட்டைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.



விளையாட்டை உங்கள் கணினியில் பதிவிறக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்:


STEP 1:  முதலில் store.epicgames.com க்குச் செல்ல வேண்டும்.


STEP 2: மேலே உள்ள பதிவிறக்க பொத்தானை அழுத்துவதன் மூலம் Epic Games Installer ஐ நிறுவ வேண்டும்.


STEP 3: இந்த செயலியை கணினியில் நிறுவிய பின், அதை இயக்கி எபிக் கணக்கை உருவாக்கி உள்நுழைய வேண்டும்


STEP 4: இப்போது தேடல் பட்டியில் Fall Guys என டைப் செய்து தேட வேண்டும்


STEP 5: விளையாட்டின் முன் இருக்கும் "Get" பொத்தானை அழுத்துவதன் மூலம், பணமே இல்லாமல் (zero billing) பில்லில் கேமை வாங்கலாம். இதற்குப் பிறகு, கேம் உங்கள் கணக்கில் இணைக்கப்படும், அதை நீங்கள் பதிவிறக்க முடியும்.


மேலும் படிக்க | ரிலையன்ஸ் ஜியோவில் இருந்து முகேஷ் அம்பானி ராஜினாமா


ஃபால் கைஸ் என்பது "மல்டி-பிளேயர் பார்ட்டி ராயல் கேம்" ஆகும். இங்கு இறுதிவரை உயிர்வாழும் வீரர்களே வெற்றியாளர்களாக மாறுகிறார்கள். ஆனால் இங்கே ஒருவரையொருவர் துப்பாக்கியால் தாக்குவதற்குப் பதிலாக, டிராக்கில் செல்லும்போது எதிர்படும் இடர்களையும் தடைகளையும் கடக்க வேண்டும்.


சமீபத்தில், PUBG இன் PC மற்றும் கன்சோல் பதிப்புகள்: போர்க்களங்கள் கட்டணத்திற்குப் பதிலாக இலவசமாக விளையாடும் (F2P) மாதிரிக்கு மாற்றப்பட்டன. இந்த மாற்றத்தின் மூலம், விளையாட்டின் வருவாய் முந்தைய ஆண்டை விட 61 சதவீதம் அதிகரித்து $82.3 மில்லியனாக இருந்தது.


கன்சோலில் அவற்றின் பதிவிறக்கங்களும் அதிகமாக உள்ளது. இங்கு அதன் வருவாய் கடந்த ஆண்டை விட 274 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் Fall Guys கேமை இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ள அனுமதிக்கலாம் என்ற நிறுவனம் முடிவெடுத்தது.


மேலும் படிக்க | கிரிப்டோவில் ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லை; காரணத்தை விளக்கும் பில் கேட்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR