கொரோனா வைரஸ் காலத்தில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் உற்பத்தியை எவ்வாறு மீண்டும் தொடங்குவது என ஹாலிவுட் துறை குழம்பியுள்ள நிலையில், சவால்களைச் சமாளிக்க ஒரு துறை மற்றவர்களை விட சிறப்பாக தயாராகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆம், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஆபாசத் தொழில் துறை 1990-களில் HIV/AIDS தொற்றுநோய்களின் போது தனது நடிகர்களைப் பாதுகாக்க அதன் சொந்த சோதனை முறை மற்றும் தரவுத்தளத்தைக் கொண்டு வந்தது. இந்நிலையில் தற்போது COVID-19 தொற்றுநோய்களின் போது வயது வந்தோருக்கான பொழுதுபோக்கு துறை இதே முறையினை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது.


1990-களின் பிற்பகுதியில் ஒரு ஆபாச நடிகர் இந்த HIV பரிசோதனை முறையை உருவாக்கியதாகவும், தொழில்துறையில் பலரை பாதித்த பின்னர் இந்த நெறிமுறைகள் நிறுவப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இப்போது மருத்துவராக இருக்கும் முன்னாள் ஆபாச நட்சத்திரம் ஷரோன் மிட்செல் தான் PASS (செயல்திறன் கிடைக்கும் திட்டமிடல் சேவைகள்) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பை உருவாக்கினார் எனவும், இதில் ஆபாச நடிகர்கள் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் பாலியல் பரவும் நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட வேண்டும் எனவும் கூறப்படுகிறது. இந்த சோதனை முறையில் பெறப்பட்ட முடிவுகள் ஒரு தரவுத்தளத்தில் உள்ளிடப்பட்டு, பின்னர் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் அனுப்பிவைக்கப்படும், இந்த தகவல்களை கொண்டு தயாரிப்பாளர்கள் தங்கள் பணிகளை ஆரோக்கியமான கலைஞர்களை கொண்டு உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.


தற்போது உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் உற்பத்தியை எவ்வாறு மீண்டும் தொடங்குவது என ஹாலிவுட் துறை குழம்பியுள்ளது. இந்நிலையில் தற்போது தனது தயாரிப்புகளை மீண்டும் துவங்க லாஸ் ஏஞ்சல்ஸ் ஆபாச துறையின் அப்போதைய HIV பரிசோதனை முறையை தற்போது பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.