பிரபாஸ் நடிப்பில் 3 மொழிகளில் உருவாகும் படத்துக்கு 'சாஹூ' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருக்கும் 'பாகுபலி 2' பணிகள் அனைத்தும் முடிவடைந்து ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக இருக்கிறது. சுமார் 3 வருடங்களாக 'பாகுபலி' படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் பிரபாஸ்.


'பாகுபலி 2' படத்துக்குப் பிறகு பிரபாஸ், இயக்குநர் சுஜித் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 'பாகுபலி' கதாபாத்திரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இப்புதிய படத்தில் நடிக்கவுள்ளார் பிரபாஸ்.


தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகவுள்ள இப்படத்துக்கு 'சாஹூ' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். மூன்று மொழிகளிலுமே இதே பெயரில் தான் தயாராகவுள்ளது.