சலார் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை மீண்டும் எடுக்கும் படக்குழு! இதுதான் காரணமா?
Salaar Movie: சலார் படம் செப்டம்பர் மாதம் வெளியாக இருந்த நிலையில், கடைசி கட்டத்தில் ரிலீஸ் தேதி தள்ளி போனது. படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
Salaar Part 1 - சலார் படம் அதன் அறிவிப்பு வெளியான காலத்திலிருந்தே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த படத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர், மேலும் இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை கேஜிஎஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்குகிறார். மேலும் கேஜிஎஃப் மற்றும் காந்தாரா போன்ற பிளாக்பஸ்டர் படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இந்த படம் ஏற்கனவே செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், சலார் படம் அந்த தேதியில் வெளியாகாது என்று சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டு வந்தது. உடனே படம் தள்ளிப்போவதாக படத்தின் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து அதிகார்வப்பூர்வமாக கூறப்பட்டது. பல இடங்களில் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு பலரையும் ஏமாற்றம் அடைய செய்தது. சில விஎஃப்எக்ஸ் பிரச்சனைகளால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதாக தகவல் வெளியானது.
மேலும் படிக்க | பிரபல நடிகையுடன் காதலில் விழுந்த அனிருத்..! விரைவில் திருமணமா..?
சலார் படம் தொடர்பாக வெளியான சமீபத்திய அப்டேட்டில், இயக்குனர் பிரஷாந்த் நீல் படத்தின் கிளைமாக்ஸ் உட்பட சில காட்சிகளை மீண்டும் படமாக்குவதற்காக படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் பட குழுவினரை மீண்டும் சந்தித்துள்ளார். படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்த பிறகு பார்த்த போது, சில காட்சிகளை இன்னும் மெருகேற்றலாம் என்று இயக்குனருக்கு தோன்றி உள்ளது. எனவே தான் கிளைமாக்சில் சில காட்சிகளை மீண்டும் படமாக்கி உள்ளார் இயக்குனர் பிரசாந்த் நீல். மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது சாதகமாக தான் அமையும் என்று தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர். பார்வையாளர்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தை அளித்து, அவர்களை குஷிப்படுத்த படக்குழு தயாராகி வருகிறது. இது தவிர, சலார் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் இன்னும் முழுவதும் தயார் ஆகவில்லை என்றும், இதுவும் தாமதத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
சலார் படம் டிசம்பர் 2020ல் அறிவிக்கப்பட்டது, இப்படத்தில் ஸ்ருதிஹாசன் முன்னணி நடிகையாக இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. கூடுதலாக, ஈஸ்வரி ராவ் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். 2021ல், மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படம் கேஜிஎப் படத்தின் காலகட்டத்தில் நடக்கும் கதையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சலார் புதிய ரிலீஸ் தேதி
முன்னதாக, சலார் படத்தை செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். இந்நிலையில், ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் படத்தின் புதிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் டிசம்பர் 22, 2023 அன்று சலார் படம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் வார விடுமுறையில் படம் வெளியாக உள்ள நிலையில், ஷாருக்கானின் 'டன்கி' படத்துடன் 'சலார்' மோதவுள்ளது. இந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் மற்றும் ஜவான் படங்கள் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் பற்றிய இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ