லியோ to ரத்தம்- அக்டோபர் மாதம் வெளியாகும் தமிழ் படங்கள்..!

October Tamil Movie Releases: அக்டோபர் மாதம் என்னென்ன தமிழ் படங்கள் வெளியாகின்றன..? இங்கே பார்க்கலாம்.  

Written by - Yuvashree | Last Updated : Sep 30, 2023, 02:55 PM IST
  • அக்டோபர் மாதம் முன்னணி நடிகர்களின் தமிழ் படங்கள் வெளியாகின்றன.
  • லியோ, தி ரோட் போன்ற படங்கள் லிஸ்டில் உள்ளன.
  • வேறு என்னென்ன படங்களை தியேட்டருக்கு சென்று பார்க்கலாம்..?
லியோ to ரத்தம்- அக்டோபர் மாதம் வெளியாகும் தமிழ் படங்கள்..!  title=

அக்டோபர் மாத பட ரிலீஸ்கள்: கோலிவுட் சினிமாவிற்கு இது, பட ரிலீஸ் சீசன். இந்த சீசனில் பல தமிழ் படங்களும் இந்திய அளவில் பெரிய படங்களும் வெளியாகின்றன. இதில் பல பெரிய ஸ்டார்களின் படங்களும் வெளவர இருக்கின்றன. இதனால் சினிமா ரசிகர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் படு குஷியில் உள்ளனர். அப்படி என்னென்ன படங்கள் வெளியாகின்றன? இங்கே பார்ப்போம். 

800:

தமிழ் திரையுலகில் வெளியாவதற்கு முன்னரே பரபரப்பை ஏற்படுத்திய படம் ‘800’. இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை குறித்து எடுக்கப்பட்டுள்ள படம் இது. இதில் முதலில் விஜய் சேதுபதி நாயகனாக நடிப்பதாக இருந்தது. ஆனால், இதற்கு தமிழ் ரசிகர்கள் தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அவர் இந்த படத்தில் இருந்து விலகினார். பின்னர், முத்தையா முரளிதரனின் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைகக் மதுர் மிட்டல் ஃபிக்ஸ் செய்யப்பட்டார். இதில், மகிமா நம்பியார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 

‘800’படத்தை எம்.எஸ் ஸ்ரீபதி இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிரார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் 6ஆம் தேதியன்று வெளியாகிறது. 

மேலும் படிக்க | IMDB TOP 10 MOVIES: சொதப்பிய பாலிவுட் படங்கள்! அசத்திய தென்னிந்திய படங்கள்!

ரத்தம்:

கோலிவுட்டின் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர், விஜய் ஆண்டனி. சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். இவர் நடிப்பில் இம்மாதம் 6ஆம் தேதி வெளியாக இருக்கும் படம், ரத்தம். இந்த படத்தை சி.எஸ் அமுதன் இயக்கியுள்ளார். ரம்யா நம்பீசன், நந்திதா, மகிமா நம்பியார், ஜெகன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இந்த படம், க்ரைம்-த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளதால் ரசிகர்கள் பலர் இதன் ரிலீஸை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். 

தி ரோட்:

சமீப காலமாக கோலிவுட்டில் வெளியாகும் படங்களில் ஹீரோவுக்கு கதாநாயகியாக மட்டுமன்றி கதாநாயகிக்காக மட்டும் எடுக்கப்படும் கதைகளிலும் நடித்து வருகிறார், த்ரிஷா. இது போன்ற கதையில் அவர் நடித்திருக்கும் இன்னொரு படம், தி ரோட். இந்த படத்தை அருண் வசீகரன் இயக்கியுள்ளார். இது அவரது முதல் படமாகும். இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள்து. தி ரோட் படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படமும் அக்டோபர் 6ஆம் தேதியன்று வெளியாகிறது. 

Tamil Movies October Release

லியோ:

விஜய் ஹீரோவாக நடித்துள்ள படம், லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இவர்கள் இருவரும் இதற்கு முன்னர் ‘மாஸ்டர்’ படத்தில் ஒன்று சேர்ந்து பணிபுரிந்துள்ளனர். லியோ படத்திற்கு, இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது முதலே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், த்ரிஷா, பிரியா ஆனந்த் என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் மெயின் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் சஞ்சய் தத் மற்றும் அர்ஜூன் ஆகியோரின் கதாப்பாத்திரங்கள் குறித்த வீடியோக்கள் வெளியிடப்பட்டன. இது, படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பினை தாறுமாறாக தூண்டியுள்ளது. 

படம், வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது நிறைய நம்பிக்கை உள்ளதால் படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், த்ரிஷா நடித்துள்ள தி ரோட் திரைப்படமும் லியோ திரைப்படமும் இந்த மாதம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ரூ.100 கோடியை கடந்த 8 தென்னிந்திய திரைப்படங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News